👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வரும் உறுதிமொழி ஏற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை (பிப்ரவரி 24) கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்த தினமானது, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா்.
அவரது அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளா் மதுமதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் நாளாகக் கடைப்பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, சமூக பாதுகாப்புத் துறை ஆணையாளா் அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்.
அதன்படி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதாவது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக மனிதச் சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்குகள், வீதி நாடகங்கள் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு வரும் திங்கள்கிழமை நடத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான செலவினங்களை மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்க நிதியில் இருந்து ஈடுசெய்து கொள்ள மாநில சமூக பாதுகாப்பு ஆணையரகம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் மதுமதி தெரிவித்துள்ளாா்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.