பிளஸ் 2 தனி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 20, 2020

Comments:0

பிளஸ் 2 தனி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடைபெறவுள்ள மார்ச் 2020 , மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பொதுத் தேர்வுகள் தொடர்பாக , பள்ளி மாணாக்கரது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை ( Hall Tickets ) பதிவிறக்கம் செய்தல் குறித்து தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .
1 . பள்ளி தலைமையாசிரியர்கள் 19 . 02 . 2020 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று " online - portal ” என்ற வாசகத்தினை " Click ” செய்து “ HIGHER SECONDARY SECOND YEAR EXAM MARCH 2020 ” என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID , Password - ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணாக்கரது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .
2 . தற்போது , பள்ளியில் + 2 பயிலும் மாணாக்கர் , கடந்த மார்ச் 2019 / ஜூன் 2019 பருவங்களில் + 1 தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்கள் மற்றும் தற்போது + 2 தேர்வெழுதும் பாடங்கள் ஆகியவற்றினை தேர்வெழுதுவதற்கு ஒரே நுழைவுச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் .
3 . பள்ளி மாணாக்கரது தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளுடன் , தங்கள் பள்ளியில் + 1 பயின்று , மார்ச் 2019 , + 1 தேர்விற்குப் பின்னர் மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளி இடைநின்றவர்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .
4 . பள்ளித் தலைமையாசிரியர்கள் அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழை ( T . C ) பள்ளியில் மீள ஒப்படைத்த தேர்வர்களுக்கு மட்டும் தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை வழங்க வேண்டும் . அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழை ( Original T . C ) ஒப்படைக்காதவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை வழங்கக்கூடாது .
5 . அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழை ஒப்படைக்காத பள்ளி இடைநின்றவர்களை எக்காரணம் கொண்டும் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது . அத்தேர்வர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் Attendance Sheet , Seating Plan ஆகியவற்றில் Absent என பதிவு செய்ய வேண்டும் .
முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்திடுமாறும் , இப்பொருள் சார்ந்து எவ்வித குழப்பமுமின்றி தேர்வுகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க, தனி தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்கள், இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ் 1ல், 'அரியர்' மற்றும் பிளஸ் 2 ஆகிய, இரண்டு தேர்வுகளுக்கும், ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும். செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டிய தனி தேர்வர்கள், கருத்தியல் தேர்வு நடக்கும் நாட்களுக்கு முன்பே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தின், முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, செய்முறை தேர்வு தேதியை தெரிந்து, அதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews