உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 20, 2020

Comments:0

உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வளர்ந்து வரும் நாடுகளின் 100 சிறந்த பல்கலைகள் பட்டியலில் இந்தியாவின் 11 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' என்ற செய்தி நிறுவனம் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைகள் அடங்கிய பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதற்காக 533 பல்கலைகளை தேர்வு செய்து தர வரிசைப்படுத்தியது. அதில் மொத்தம் 47 நாடுகளைச் சேர்ந்த பல்கலைகள் இடம்பெற்றுள்ளன.
அந்தப் பட்டியலில் 56 இந்திய பல்கலைகள் இடம் பிடித்துள்ளன. முதல் 100 இடங்களில் அதிகபட்சமாக சீனாவைச் சேர்ந்த 30 பல்கலைகள் இடம்பிடித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்த 11 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதில் ஐ.ஐ.எஸ்சி. எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனம் 16வது இடத்தைப் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி. 32வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி. 34வது இடத்தையும், டில்லி ஐ.ஐ.டி. 38வது இடத்தையும், ரூர்கி ஐ.ஐ.டி. 58வது இடத்தையும், இந்துார் ஐ.ஐ.டி. 61வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி. 63வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஐ.சி.டி. எனப்படும் வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் 73வது இடத்தை பிடித்துள்ளது. இதில் காரக்பூர் ஐ.ஐ.டி. 23 இடங்களும், டில்லி ஐ.ஐ.டி. 28 இடங்களும், சென்னை ஐ.ஐ.டி. 12 இடங்களும் முன்னேறியுள்ளன. ரோபர் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.சி.டி. நிறுவனங்கள் முதன்முறையாக இந்த பட்டியலில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews