👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள ராதா கிருஷ்ணன் விளையாட்டு மையதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு புகார் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்றும் புகார் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக சொல்வதையும் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த விவரங்களை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கினார். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், 10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்.13ல் நிறைவு பெறும். மே.4ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26ல் நிறைவு பெறும்; மே.14ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு;ஏப்.24ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர், என்றார்.

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
"ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்து மொட்டை கடிதம் தான் வந்துள்ளது; அதில் புள்ளிவிவரம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை"
என அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்து மொட்டை கடிதம் தான் வந்துள்ளது, அதில் புள்ளிவிவரம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என அவர் தெரிவித்தார். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்காக டெட் 1 தேர்வும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்கு ஆசிரியர் பணிக்காக டெட் 2 தேர்வும் நடத்தப்பட்டது. 2012, 13, 14 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சியானவர்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் 2-ம் தாளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாக புகார் எழுத்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது; 2012-14 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது ஆதாரமற்ற புகார். ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புள்ளி விவரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.