Breaking

Thursday, February 27, 2020

நாளை 28ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ( Updated )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கிண்டியில் வரும் 28ம்தேதி தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான முகாம் நடத்தப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் விஷ்ணு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ‘வேலைவாய்ப்பு வெள்ளியாக’ அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம், கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 35 வயதிற்குட்பட்ட 8ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் உள்ளிட்ட கல்வித் தகுதியுடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog