👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விழுப்புரம் மாவட்டம் , மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரம் , அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் எதிர்வரும் 28 . 02 . 2020 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 28 . 02 . 2020 அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது . மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலகமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் . மேலும் , மாணவ / மாணவியர்களுக்கு 28 . 02 . 2020 அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 28 . 02 . 2020 - க்குப் பதிலாக 14 . 03 . 2020 ( சனிக்கிழமை ) பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது ,
கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படும். இந்த ஆண்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதால் அவர்களுக்கும் உள்ளூர் விடுமுறை பொருந்துமா? என்பது குறித்து முடிவு தெரியவில்லை.
மேல்மலையனூர் திருவிழாவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களும் அதிகளவில் பங்கேற்பார்கள் என்பதால் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.