தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் கணக்கெடுப்பு.!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 18, 2020

Comments:0

தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் கணக்கெடுப்பு.!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து மாவட்டங்களிலும், தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகளை கணக்கெடுத்து, அவற்றை தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - பிச்சாண்டி: நடுநிலை பள்ளியை, உயர்நிலை பள்ளியாகவும், உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாகவும் நிறைய இடங்களில், தரம் உயர்த்த வேண்டி உள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஒரே ஆண்டில், ௧௦௦ பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. என் தொகுதியில், பள்ளியை தரம் உயர்த்த, பணம் செலுத்தி, பல ஆண்டுகளாகியும், தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. பல கிராமங்களில், பஸ் வசதி இல்லை. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். பஸ் வசதி இல்லாத கிராமங்களில் உள்ள, பள்ளிகளை தரம் உயர்த்தினால், மாணவர்கள் பஸ்சை தேட வேண்டியதில்லை. எனவே, பள்ளிகளை தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், கூடுதல் மாண வர்கள் உள்ள பள்ளிகளில், தரம் உயர்த்தப்பட வேண்டியதை கண்டறிந்து, அவற்றை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில்,ஒரே ஆண்டில், 225 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தி.மு.க., - தங்கம் தென்னரசு: உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த, 1 லட்சம் ரூபாய்; மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, 2 லட்சம் ரூபாய் நிதி கேட்கப்படுகிறது. தற்போது, மத்திய அரசு திட்டங்களில், பள்ளியை தரம் உயர்த்த, நிதி ஒதுக்கும் போது, மக்களை நிதி செலுத்தும்படி கூறுவது தேவையற்றது. எனவே, பள்ளியை தரம் உயர்த்த, மக்களிடம் பணம் வசூலித்து, நிதி செலுத்த வேண்டும் என்ற, நிபந்தனையை தளர்த்த வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, இந்த நிபந்தனை தளர்த்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும், நிபந்தனையை தளர்த்துவது குறித்து, முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்திய அரசு அதிமுக அரசுதான் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டிலும் பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. அன்றுபேரவையில், 2020-21 நிதிஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல்முடிந்ததும் பேரவையை 17-ம்தேதிக்கு தள்ளிவைப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தை 4 நாட்கள், அதாவது பிப்.17 முதல் 20-ம்தேதிவரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2 நாள் விடுமுறைக்குப் பிறகு பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. முதலில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கீட்டு தொகை தொடர்பாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது; பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த ரூ.1 லட்சமும், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ.2 லட்சமும் பங்குத்தொகையாக வாங்கப்படுகிறது. மேலும் பொதுமக்களிடம் பங்கீட்டுத் தொகை வாங்கும் முறையில் இருந்து விலக்கு அளிக்க பேரவையில் திமுக உறுப்பினர் கோரினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மலைவாழ், கிராமப்புற பள்ளிகளை தரம் உயர்த்தும்போது பொதுமக்களிடம் பங்கீட்டுத்தொகை வழங்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews