👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முறைகேடு புகார்களைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை சீர்திருத்தத்தின் ஓர் அங்கமாக தற்போது குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் இருப்பவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை ஏற்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரைத் தகுதி நீக்கம் செய்ததுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதத் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து டிஎன்பிஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம், தேர்வு நடைமுறைகள் முழுதும் நிறைவடைந்த பின்னர், இறுதியாகத் தேர்வான நபர்கள் குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பன உள்ளிட்ட 6 சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மையம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் 2019-ல் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் இருப்பவர்களின் விவரங்கள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அத்தேர்வில் வெற்றி பெற்று பணியில் உள்ளவர்களின் பெயர், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, புகைப்படம், தேர்வெழுதிய மையம், அதன் முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
முறைகேடுகளைக் களையும் நோக்கிலும் தேர்வு மற்றும் திருத்தம் நேர்மையான முறையில் நடந்ததை உறுதி செய்யவும் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.