Search This Blog
Thursday, February 06, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி மாதச்சம்பளம் வழங்கப்படும். காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது என்று மாநகராட்சிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் இயங்கி வருகிறது. இதில் ஆணையர்கள், உதவிஆணையர்கள், பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள், நகர்நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வருகைப்பதிவேட்டின்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பல்வேறு குளறுபடிகள் மேற்கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பயோமெட்ரிக் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவியை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், விரைவில், அனைத்து மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும், பயோமெட்ரிக் வருகை பதிவினைக்கொண்டு, எத்தனை நாட்கள் பணிக்கு வந்துள்ளனர். எத்தனை நாட்கள் விடுமுறை, எத்தனை நாட்கள் அனுமதி பெற்று விடுமுறையில் சென்றுள்ளனர். பிஎப் எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆன்லைன் மூலமாக கணக்கிடப்பட்டு, மாதச்சம்பளம் வழங்கப்படும். இதில் எந்தவிதமான முறைகேடுகளும் மேற்கொள்ள முடியாது. அத்தோடு காகித வருகைப்பதிவேட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
BIO METRIC
TREASURIES
தமிழகம் முழுவதும் இனி பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின்படிதான் சம்பளம்: காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி!
தமிழகம் முழுவதும் இனி பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின்படிதான் சம்பளம்: காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி!
Tags
# BIO METRIC
# TREASURIES
TNPSC - ACCOUNTS OFFICER, CLASS III (TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE ) (Oral Test) - 18/01/2023 - PDF
கருவூல கணக்குத் துறை 2022 - ம் ஆண்டு வருடாந்திர நேர்காணல் - அறிவுரைகள் வழங்குவது தொடர்பாக
10.03.2020 க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்.
Labels:
BIO METRIC,
TREASURIES
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84617316
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.