முறைகேட்டில் 42 பேர்...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். குரூப்-2ஏ தேர்வை பொருத்தவரை 2017 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி இருக்க கூடிய அந்த 42 பேர் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.இந்த வழக்கில் 8 பேரை கைது செய்திருக்கின்றார்கள். அந்த 8 பேருமே அரசு ஊழியர்கள்
இந்நிலையில் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு குறித்த சிபிசிஐடி விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள் முதல் 20 கேள்விகளுக்கான விடையை மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு வேறு எந்த ஒரு கேள்விக்கும் விடை அளிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக அவர்கள் விடைத்தாள்களை வாகனத்தில் கொண்டு செல்லும் போது, ஜெயக்குமார் தலைமையிலான மோசடி கும்பல் அந்த விடைத்தாள்களை எடுத்து மற்ற கேள்விகளுக்கான பதிலை இணைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
ஏனென்றால் முதல் 20 கேள்விகளுக்கு விடையளித்து இருக்கக் கூடியவர்கள் தான் தனக்கு பணம் கொடுத்தவர்கள் என்பதை அடையாள படுத்துவதற்கான ஒரு குறியீடாக வைத்து இருக்கிறார்கள் இந்த மோசடி கும்பல். அந்த குறியீட்டின் மூலமாக தான் பிற கேள்விகளுக்கு விடைதாள் இணைக்கப்பட்டு , தேர்வில் வெற்றி பெற்று , 42 பேரும் அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.