அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நெல்லையில் காவலர் தேர்வில் முறைகேடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 10, 2020

Comments:0

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நெல்லையில் காவலர் தேர்வில் முறைகேடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோவில் பணிபுரிந்து வந்த சி.எஸ்.எப் காவலர் எழுத்து தேர்வில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரிகு பாருயா காவலர் எழுத்து தேர்வில் முறைகேடு செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எழுத்து தேர்வு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவலர் பிரிகு பாருயா பணியில் நீக்கப்பட்டார். காவலர் தேர்வில் போலியான விளையாட்டு சான்றிதழ் கொடுத்ததாக எழுந்துள்ள புகாரையடுத்து 1,000 பேரின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவர்களது நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறை ஆகியவற்றுக்கான காவலர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்யூஎஸ்ஆர்பி) செயல்பட்டு வருகிறது. இந்த 3 துறைகளிலும் இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், சிறை வார்டன்கள் பிரிவில் 8,888 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம்தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 15 மையங்களில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 47 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர். அதன்பிறகு இறுதியாக 8,800 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த 3 பணியிடங்களிலும் விளையாட்டு வீரர்களுக்கென 10 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆனால், ஏராளமானோர் தகுதியற்ற சான்றிதழ்களை வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பலர், பல்வேறு விளையாட்டு சங்கங்கள், அமைப்புகள் மூலம் சான்றிதழ்களை பெற்று விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு இடஒதுக்கீட்டில் தேர்வு பெற்று இருந்த அனைவரின் விளையாட்டு சான்றிதழ்களும் சரிபார்ப்பு பணிக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சுமார் ஆயிரத்து 13 பேரின் சான்றிதழ்கள் தகுதியற்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு இடஒதுக்கீட்டில் இடம் கேட்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மற்ற மாநில அணிகளுடன் விளையாடி இருக்க வேண்டும். ஆனால், தமிழக விளையாட்டு ஆணையம் அங்கீகரித்த போட்டிகளில் பங்கேற்காமல் வேறு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பங்கேற்றவர்களும், சங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும், சிலர் சங்கம், அமைப்புகளிடம் இருந்து போலியாக சான்றிதழ் பெற்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களது பணிநியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில், 200 பேர் கட்-ஆப் மார்க் அடிப்படையில் மற்ற பிரிவிலேயே தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. மற்ற 800 பேருடைய சான்றிதழ் தகுதியற்றது என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு வேலை மறுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைமையக சிறப்புக் குழு ஒன்று சான்றிதழ்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற சான்றிதழ்களை கொடுத்த ஆயிரம் பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. தவறான சான்றிதழ்களை கொடுத்து இருந்தாலோ, போலி சான்றிதழ் வழங்கி இருந்தாலோ அது மோசடி குற்றமாக கருதப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வை போல காவலர் தேர்வில் 1,000 பேர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயற்சித்தது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8,826 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் 47 ஆயிரம் பேர் தேச்சி பெற்றனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற்ற போது ஆயிரம் பேரின் விளையாட்டு சான்றிதழ் போலியானது என்பது கண்டறியப்பட்டது. இதனை மறுத்துள்ள தேர்வர்கள் கடந்த 2017 முதல் 2018 ஆண்டுகளில் இதுபோல ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்று பணிக்கும் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 10% பணிகள் விளையாட்டு பிரிவிற்கு ஒதுக்கப்படுகிறது. இந்த பிரிவில் பணியில் சேர போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர சிலர் முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அதிகம் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பணம் கொடுத்த்து சான்றிதழ் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீருடை பணியாளர் தேர்வு எழுதிய 1019 பேர் வேலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வாகி இருப்பது காவல்துறை வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 ஏ, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடுகள் அம்பலமாகி உள்ளது. இந்தநிலையி–்ல் அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்தே தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 2,465 2ம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 2ம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 2 நிலை சிறைக் காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் என்று மொத்தம் 8826 பதவிகளுக்குரிய பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த 06.03.2019 அன்று வெளியிட்டது.
இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 25.08.2019 சென்னை உட்பட 32 மாவட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது. எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தேர்வர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த தேர்வில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு போன்றவை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 4ம் தேதி தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிபட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 6343, பெண்கள் 2430 பேர் என்று 8773 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக வேலூர் மையத்தில் இருந்து 1019 பேர் தேர்வாகியுள்ளனர்.
இதில் ஆண்கள் 807 பேரும், பெண்கள் 212 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்திலேயே 32 மாவட்டங்களில் வேலூரில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் தேர்வாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆயுதப்படை போலீஸ், தமிழ்நாடு சிறப்பு படை போலீஸ், தீயணைப்பு வீரர், ஜெயில் வார்டன் ஆகிய நிலையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 85 பேர் அடுத்தடுத்து தேர்வாகியுள்ளனர். இதனை போன்று அடுத்த ஒரு வரிசையில் 28 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இவர்களது பதிவு எண்களும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. இதனை போன்று மற்றொரு வரிசையில் 63 பேர் அடுத்தடுத்த பதிவு எண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அவர்களது வரிசை எண்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. இந்த விபரங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews