TNPSC : குரூப்-4 தேர்விற்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிட முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 20, 2020

Comments:0

TNPSC : குரூப்-4 தேர்விற்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிட முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்ததாலும், அவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததாலும் மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேர்வர்கள் பலர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதவிர ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை தவிர்த்து, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்து அங்கு தேர்வு எழுதியவர்களையும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.
அதன்படி, கடந்த 13-ந்தேதி காலையில் விசாரணை தொடங்கியது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கத்தை அளித்தனர். இந்த விசாரணை மறுநாள் அதிகாலை வரை விடிய விடிய நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் துருவித்துருவி கேள்விகள் கேட்டனர். விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தவர்களில் பெரும்பாலானோரின் பதில்கள் ஒரே மாதிரியாக இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை மட்டும் நீக்கிவிட்டு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அறிவுத்திறன் சோதனையில் புகாரில் தொடர்புடையவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதால் முறைகேடு நடந்தது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கீழக்கரை மற்றும் ராமேசுவரம் ஆகிய இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மீது போலீசில் புகார் அளித்து விசாரணைக்கு உட்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தேர்வு பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காவல் துறையில் புகார் அளிக்கவும் டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், இடைத் தரகர்கள் துணையுடன், பணி நியமனம் நடந்ததா என்பது குறித்து, இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, புதிய ஆட்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இந்நிலையில், 'குரூப் - 4' பதவிகளான, வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், வரி தண்டலர் உள்ளிட்டவற்றில் காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, 2019, செப்டம்பரில் நடந்தது. இதன் முடிவுகள், நவம்பரில் வெளியாகின. தேர்வானோர் பட்டியலில், முதல், 100 இடங்களில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் இடம் பெற்றனர்.
இது குறித்து, தேர்வர்கள் தரப்பில் முறைகேடு புகார் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் சென்று, விசாரணை நடத்தினர். குரூப் - 4 தேர்வில் முன்னிலை இடம் பெற்ற, 50க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி, சென்னையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான தேர்வர்களுக்கு, குரூப் - 4 பாட திட்டத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய வினாத்தாளுடன், மாதிரி தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. இந்த தேர்வின் விடைத்தாள்களுடன், தேர்வர்கள் ஏற்கனவே எழுதிய தேர்வு விடைத்தாள்களின் விடைகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குரூப் - 4 தேர்வு உள்பட, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சிலருடன், இடைத்தரகர்கள் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மீது, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில், அரசு துறையில் பணியாற்றும் ஓர் ஊழியர், சில பயிற்சி மையங்களுடன் தொடர்பில் இருந்து, வேலை வாங்கி தர உதவுவதாக, தேர்வர்களிடம் பணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையான தகவலா; இடைத்தரகர்கள் செயல்பட்டிருந்தால், அதனால் தேர்வர்கள் தேர்ச்சி அடைந்தது எப்படி என்று, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் விசாரணை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை நேற்று முடிந்த நிலையில், இடைத் தரகர்களின் தொடர்புகள் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., இன்று விசாரணை நடத்த உள்ளது.இந்த பிரச்னையை போலீஸ் வழியாக விசாரிப்பதா; டி.என்.பி.எஸ்.சி.,யில் துறை ரீதியான நடவடிக்கையிலேயே முடித்து கொள்ளலாமா என்பது குறித்து, இன்று, டி.என்.பி.எஸ்.சி.,யின் ஆணைய அதிகாரிகள் கூடி முடிவு எடுக்க உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கின்றனர். அதன்அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்ததாலும், அவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததாலும் மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக தேர்வர்கள் பலர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்கமுடிவு செய்யப்பட்டது. இதுதவிர ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை தவிர்த்து, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்து அங்கு தேர்வு எழுதியவர்களையும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.அதன்படி, கடந்த 13-ந்தேதி காலையில் விசாரணை தொடங்கியது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கத்தை அளித்தனர்.
இந்த விசாரணை மறுநாள் அதிகாலை வரை விடிய விடிய நடத்தப்பட்டது.சம்பந்தப்பட்டவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் துருவித்துருவி கேள்விகள் கேட்டனர். விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தவர்களில் பெரும்பாலானோரின் பதில்கள் ஒரே மாதிரியாக இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், முக்கிய முடிவுகள் எடுப்பதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளனர்.ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அதுகுறித்ததான உரிய அறிவிப்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews