Breaking

Friday, January 10, 2020

பாரதிதாசன் பல்கலை.யில் இடஒதுக்கீடு முறை மாற்றம்: ராமதாஸ் கண்டனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'திருச்சி பாரதிதாசன்பல்கலையில் புதிய முறையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கக் கூடாது' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவரது அறிக்கை:திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பல்வேறு துறைகளுக்கு 54 ஆசிரியர் களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு புதிய முறையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க பல்கலை நிர்வாகம் முடிவு செய்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது.
ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கும் ஒட்டுமொத்த பல்கலையையும் ஒரே அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதி இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் போது ஒவ்வொரு துறையிலும்அனைத்து சமூக \பிரிவினருக்கும் பணி நியமன வாய்ப்பு கிடைக்கும். இதுதான் சமூக நீதியை தழைக்கச் செய்யும். எனவே பாரதிதாசன் பல்கலை வெளியிட்டுள்ள அறிவிக்கையை ரத்து செய்து துறை அலகு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் புதிய நியமன அறிக்கையை வெளியிடும்படி அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog