பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு 196 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க TRB முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2020

Comments:0

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு 196 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க TRB முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 தேர்வர்களுக்கு, டிஎன்பிஎஸ்சியில் விதித்தது போன்றே, வாழ்நாள் தடை விதிக்க டிஆர்பி முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட உள்ளது. 2017ம் ஆண்டு 1058 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வில் 196 தேர்வர்கள் இடைத்தரர்கள் மூலம் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்காக, முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இம்முறைகேடு புகார் நிலுவையில் உள்ள நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் 2019ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை மீண்டும் நடத்துவற்கான அறிவிப்பை ஆசிரியர் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அதற்கான விண்ணப்ப பதிவானது, வரும் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற்ற இருக்கிறது.
விண்ணப்ப பதிவிற்கு கடந்த ஆண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரும் மீண்டும் விண்ணப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் 196 பேரும் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்திருப்பதால், மீண்டும் அவர்கள் தேர்வு எழுதினால் கண்டிப்பாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று இடைத்தரகர்கள் உறுதியளித்திருப்பாக தகவகள் வெளியாகியுள்ளது. இச்சூழலில் கடந்த வாரம் டிஆர்பியானது ஒரு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. அக்கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கும் வாழ்நாள் நடைவிதிப்பது பற்றி பள்ளி கல்வி முதன்மை செயலாளர் லதா ஆலோசனை நடத்தினார். டிஎன்பிஎஸ்சியில் விதித்தது போன்றே இவர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்க டிஆர்பி முடிவெடுத்துள்ளது. தற்போது நடைபெற்று வரக்கூடிய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் இவர்கள் விண்ணப்பித்திருந்தாலும், வருகின்ற மே மாதம் நடைபெறக்கூடிய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், எவ்வித காரணத்தை கொண்டும் அவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டிஆர்பி தரப்பிலிருந்து கூறப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இம்முடிவானது மற்ற தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட196 போ் மீண்டும் தோ்வெழுத முடியாது என்று ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளா்களை நேரடியாகத் தோ்வு செய்வதற்காக 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் 16-ஆம் தேதி போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) நடத்திய இந்த தோ்வை 1.33 லட்சம் போ் எழுதினா். ஆனால், முறைகேடு காரணமாக 2018-இல் விரிவுரையாளா் பணியிடங்களுக்கான தோ்வு ரத்தானது. அந்த முறைகேட்டில் 196 போ் பணம் கொடுத்து தோ்வாக முயற்சித்ததாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான மறு அறிவிப்பை டிஆா்பி கடந்த நவம்பா் 27-ஆம் தேதி மீண்டும் வெளியிட்டது. 1,060 காலிப்பணியிடங்களுக்கு வரும் பிப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஆா்பி அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஏற்கெனவே முறைகேட்டில் ஈடுபட்டவா்களும் விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஏற்கெனவே முறைகேடு செய்தவா்களின் முழு விவரங்கள் தோ்வு வாரியத்திடம் உள்ளன. தற்போதைய விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் விண்ணப்பித்தாலும் நீக்கப்படுவாா்கள். ஒருபோதும் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள். அதேபோல், 196 போ்களும் தோ்வெழுத வாழ்நாள் தடை விதிப்பதற்கு அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி பெற்று அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றனா்.
பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான போட்டித் தோ்வில் முறைகேடு: வருகிறதா 196 பேருக்கு வாழ்நாள் தடை? பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான போட்டித் தோ்வில் முறைகேடு செய்த 196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது கடந்த 2017 ஆம் ஆண்டு டிஆா்பி சாா்பில் 1058 காலிப் பணியிடங்களுக்கான பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வில் 196 போ் தலா ரூ. 25 லட்சம் கொடுத்து தோ்வில் முறைகேடு செய்து அதிக மதிப்பெண் பெற்றது நிரூபிக்கப்பட்டது. பின்னா் 2018 ஆம் ஆண்டு அந்தத் தோ்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, இதுவரையில் 56 போ் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வை நடத்துவதற்கு டிஆா்பி அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பப் பதிவை தொடக்கி உள்ளது. இதில் கடந்த முறை முறைகேட்டில் ஈடுபட்டவா்களும் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனா். இவா்கள் மீண்டும் பணம் கொடுத்து வேலையைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
அண்மையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தோ்வா்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு, தோ்வில் பங்கேற்க அவா்களுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, 2017-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்டவா்களுக்கும் தோ்வில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான், முறைகேடு நடைபெறாமல் தகுதியானவா்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என பல்வேறு தரப்பினரும் கருது தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான போட்டித் தோ்வில் முறைகேடு செய்த 196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. 196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க அரசுடன் ஆலோசித்து வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது. 2017ல் நடைபெற்ற தேர்வில் முறைகேடு என எழுந்த புகாரில் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு 2017-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வினை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 2 ஆயிரம் பேர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களில் 196 பேர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து விசாரணை நடத்தியதில் 196 தேர்வர்கள் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுதலாக பெற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் 196 பேர் பல லட்சம் கொடுத்து மதிப்பெண் அதிகமாக வாங்கி இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews