இஸ்ரோவில் இளம் விஞ்ஞானி பயிற்சி ISRO Yuvika 2020.. தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2020

Comments:0

இஸ்ரோவில் இளம் விஞ்ஞானி பயிற்சி ISRO Yuvika 2020.. தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ISRO Yuvika 2020: இஸ்ரோவில் பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்துக்கான ISRO Young Scientist Programme விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. Indian Space Research Organisation எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கு ஆராய்ச்சி ஆர்வத்தை தூண்டும் வகையில், சிறப்பு இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் (Young Scientists Programme) நடத்த உள்ளது. இந்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் மே மாதம் 11 முதல் 22 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு www.isro.gov.in இணையதளத்தில் இன்று (பிப்.3) தொடங்கியது.
எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், அதாவது, தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் Young Scientist Programme பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் ஆர்வம், கல்வி திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்துக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். www.isro.gov.in
அகமதாபாத், பெங்களுரூ, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து பயிற்சிகள் நடைபெறும். இதில் விண்வெளி என்றால் என்ன? அடிப்படை அறிவியல் கோட்பாடுகள், விண்கலன்களின் செயல்பாடுகள் பயன்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை அறிவியலும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும். ISRO Yuvika 2020 பயிற்சி திட்டம் மூலம் தொலைத்தூரத்தில் காணும் ராக்கெட், விண்கலன் ஆகியவற்றை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், வான்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வமும் அதிகரிக்கும். பயிற்சி முடிந்ததும் அதற்கு உரிய சான்றிதழ்களும் வழங்கப்படும். www.isro.gov.in
இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பயிற்சி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாக மார்ச் மாதம் இறுதியில் அறிவிக்கப்படும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews