👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
2016 முதல் 2019 வரை 295 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ரூ.1 லட்சம் நிதி இருந்தால் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது தொடர்பாக பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பண்பாட்டை நேரில் அறிந்துகொள்ள ஜெர்மனி மாணவர்கள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு நாடுகளை சேர்ந்த மாணவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்வு இரண்டாவது கட்டமாக நடைபெறுவதாக கூறினார். கடந்த ஆண்டு பின்லாந்து மாணவர்கள் 18 பேர் தமிழகத்திற்கு வந்ததை போல தற்போது ஜெர்மனி மாணவர்கள் 16 பேர் வருகை தந்துள்ளதாக கூறினார். இவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வீடுகளில் 14 நாட்களுக்கு தங்கியிருந்து பாரம்பரியத்தை தெரிந்து கொள்வர் என தெரிவித்தார். பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் ஒரு முக்கிய விழாவாகும்.
ஆதலால் தற்போது நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகையை ஜெர்மன் மாணவர்கள் கொண்டாடுவதுடன், தமிழகத்தின் கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சரம் குறித்தும் அவர்கள் நேரில் அறிந்து கொள்ள இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக பண்பாடு உலகளவில் பரப்ப இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், வெளிநாட்டவர்கள் இங்கு வருகை தருவதன் மூலமாக தமிழர்களின் கலாச்சாரத்தை முழுமையாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். ஜெர்மனியில் இருந்து சுமார் 16 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இரண்டு பேராசிரியர்களும் இங்கு வருகை தந்துள்ளனர். அதனை போலவே நம்முடைய மாணவ, மாணவிகள் 14 பேர்களும், அவர்களுக்கு உறுதுணையாக இரண்டு பேராசிரியர்களும் ஜெர்மன் நாட்டிற்கு செல்ல இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.