Search This Blog
Tuesday, January 28, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீட் தோ்வுக்காக சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (ஜன.31)நிறைவடைகிறது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான நீட் தோ்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது. ப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அந்த அவகாசம் ஜனவரி 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி நீட்டிக்கப்பட்ட அவகாச காலத்துக்குள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான நடைமுறை கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோா் திருத்தங்களை பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கான அவகாசம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது
'நீட்' தேர்வுக்கான விண்ணப்பத்தில், இன்று முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, டிசம்பர், 2 முதல், ஜனவரி, 6 வரை, மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில், விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை சரி செய்ய, இன்று ஆன்லைன் வசதி துவங்க உள்ளது. இந்த வசதி, 31ம் தேதி வரை நீடிக்கும் என, நீட் தேர்வு குழு அறிவித்துஉள்ளது.
NEET 2020 Correction Window: NTA NEET 2020 தேர்வு விண்ணப்பப்பதிவு பிழைதிருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
National Eligibility cum Entrance Test (NEET 2020) நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், விண்ணப்பத்தில் பிழைகள் இருப்பின், அவற்றை ntaneet.nic.in மூலமாக திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு NEET 2020 Correction Window வழங்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ், சித்தா உள்ளிட்ட மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு டிசம்பர் 2 முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.
இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வு விண்ணப்பப்படிவத்தில், ஏதேனும் பிழை செய்திருந்தால், அதனை திருத்திக் கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பிழைத்திருத்தம் நாளை (ஜன.15) முதல் ஜனவரி 31 தேதி வரையில் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு முறைகேடு நடைபெற்ற சம்பவங்கள் எதிரொலியாக, இம்முறை பெரும் கெடுபிடியாக மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
எனவே, நீட் தேர்வு விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு தகவல்களும் சரியாக இருக்கும்படி மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு முறைக்கு, இரு முறை நீட் விண்ணப்பப்படிவத்தை பார்த்து விட்டு, பிழைகள் இருப்பின் அவற்றை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் சரி செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். பிழைத்திருத்தம் செய்வதற்கான ஆன்லைன் லிங்க் நாளை முதல் திறக்கப்படுகிறது.
இந்த முறை தமிழ் உள்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளிலும் மருத்துவப்படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக அளவு மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளார்கள். நீட் விண்ணப்பப்பதிவு தொடர்பான மேலும் விபரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நீட் தோ்வு:விண்ணப்ப திருத்த அவகாசம் 31-இல் நிறைவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.