Search This Blog
Tuesday, January 14, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நடைபெறவிருக்கும் மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 06 . 01 . 2020 முதல் 13 . 01 . 2020 வரையிலான நாட்களுக்குள் , ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ண ப்பிப்பதற்கு 20 . 01 . 2020 மற்றும் 21 . 01 . 2020 ஆகிய தேதிகளில் , அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு ( Service Centres ) சென்று பதிவு செய்யுமாறு தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு சேவை மையங்களுக்கு 20 . 01 . 2020 முதல் தேர்வர்கள் வருகைபுரிவார்கள் . அவ்வாறு வருகைபுரிவோருக்கு கீழ்க்கண்டவாறு ஆன் - லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தங்களது ஆளுகைக்குட்பட்ட சேவை மையங்களை ( Service Centres ) அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
1 . 20 . 01 . 2020 காலை முதல் தேர்வர்கள் சேவை மையங்களுக்கு வருகைபுரிவார்கள் . அவ்வாறு வருகைபுரிவோரிடம் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட உரிய ஆவணங்களைப் பெற்று சேவை மையங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password - ஐ கொண்டு ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2 . www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , சேவை மையத்திற்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password - ஐ பயன்படுத்தி நுழைந்தவுடன் , சேவை மையங்கள் எவ்வாறு விண்ணப்பங்களைப் பெற வேண்டும் என்பதற்கான அறிவுரைகளைக் கொண்ட பக்கம் தோன்றும் . அவ்வறிவுரைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3 . சேவை மையங்களில் விண்ண ப்பங்கள் பெறப்படுவதற்கு 13 . 01 . 2020 அன்று கடைசி தேதியாகவும் , சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ( தக்கல் ) விண்ண ப்பங்கள் பெறப்படுவதற்கு 21 . 01 . 2020 அன்று கடைசி தேதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசிநாள்வரை பெறப்பட்டுப் பதிவு செய்த விண்ணப்பங்களை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22 . 01 . 2020 அன்று ஒப்படைக்குமாறு சேவை மையங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் .
4 . தேர்வர்களது அனைத்து விபரங்களடங்கிய பட்டியலுடன் தேர்வர்களிடமிருந்து பெறப்படும் தேர்வுக் கட்டணத்தொகையினையும் ( தக்கல் கட்டணத்தினையும் சேர்த்து ) பார்வையில் காணும் அரசாணையின்படி ஆன் - லைன் பதிவுக்கட்டணமாக ஒவ்வொரு தேர்வரிடமிருந்து பெறப்படும் ஆன்லைன் கட்டணத்தொகையினையும் ( 50 X விண்ண ப்பதாரர்கள் ) 22 . 01 . 2020 அன்று மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் தொகையாக ( Incash ) ஒப்படைக்குமாறு அனைத்து சேவை மையங்களையும் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக ஏதேனும் ஐயங்கள் எழுமாயின் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களையும் , கீழ்க்குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் சேவை மையங்களுக்கு அறிவுறுத்துமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
1-10th
DGE/DSE/DEE
PROCEEDINGS
DGE - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் ( Service Centre ) மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்
DGE - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் ( Service Centre ) மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.