வாக்கு எண்ணிக்கை சம்பளத்தில் பிடித்தம், உணவு தராததால் மயக்கம் - ஆசிரியர்கள் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 03, 2020

2 Comments

வாக்கு எண்ணிக்கை சம்பளத்தில் பிடித்தம், உணவு தராததால் மயக்கம் - ஆசிரியர்கள் போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சேலம், திருப்பூர் போன்ற இடங்களில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படாததால் சிலர் மயக்கம் அடைந்தனர். பலர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் ஆகியோருக்கு உணவு ஆட்டோவில் எடுத்து வரப்பட்டது. இதனை பார்த்த வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் அந்த ஆட்டோவை மறித்து அதில் இருந்த உணவு பொட்டலங்களை எடுத்து சென்றனர். இதனால் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு மதிய உணவு கிடைக்காமல் போனது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை ஒன்றியத்துக்கு உடுமலை அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பணியில் இருந்து அலுவலர்களுக்கு பிற்பகல் 3.30 மணியாகியும் மதிய உணவு வழங்கப்படவில்லை. பசியில் வாடிய ஆசிரியர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர். ஒரு மணி நேரத்துக்குபின் சாப்பாடு வந்தது. சாப்பிட்டுவிட்டு பணியை தொடர்ந்தனர்.
அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா அவிநாசி அருகே திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பெரியாயிபாளையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்காக ஊழியர்கள் காலை 7 மணிக்கு வந்தனர். மையத்தில் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், மற்றும் காலை உணவு உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, 9 மணியளவில் திடீரென பொறுமையுடன் காத்திருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, பள்ளியின் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் அவிநாசி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி மற்றும் அவிநாசி டி.எஸ்பி. பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக காலை உணவு வழங்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் வாக்குகள் எண்ணும் மையத்துக்கு சென்று பணியை தொடங்கினர்.
சம்பளத்தில் கமிஷன் பிடித்தம் அரசு ஊழியர்கள் சாலை மறியல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த பணியில் சூப்பர்வைசர்கள், உதவியாளர்கள் என்ற அடிப்படையில் 550க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இதில் சூப்பர்வைசர்களுக்கு 850, உதவியாளர்களுக்கு 650 சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பணியாற்றியவர்களுக்கு நேற்றிரவு அதிகாரிகள் சம்பளம் வழங்கினர். இதில் சூப்பர்வைசர்களுக்கு 850க்கு பதில், 700ம், உதவியாளர்களுக்கு 650க்கு பதில் 500ம் வழங்கப்பட்டது. இது தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. இது போன்ற அவலநிலை ஆசிரியர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போது மட்டும் அல்ல வாக்கு பதிவு அன்று காத்திருப்பு (Reserve)ஊழியர்களை சும்மா பணம் தர முடியாது என்று வாக்கு பதிவு அன்று எடுபிடு வேலைக்கு பூத்துக்கு அனுப்பி வைத்தனர் போக மறுத்தவர்களுக்கு பணம் தர முடியாது என்றும் ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டு தருகிறோம் என்று அனுப்பி விட்டனர். அந்த பணம் மீண்டும் வரவா போகிறது அந்த திருட்டு கூட்டத்திடம் இருந்து இதற்கு அங்கு உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் முழு ஆதரவு இவை நடந்தது காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் பகுதிகள் தர்மபுரி மாவட்டத்தில்

    ReplyDelete
  2. மேல் சொன்ன அனைத்தும் உண்மையே எனவே அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இதற்கு ஒரு முடிவை தேட வேண்டும் இல்லை எனில் தேர்தலில் நாம் பணியாற்றமல் மொத்தமாக புறக்கணிக்க வேண்டும். குறைந்த பட்சம் நீதிமன்றம் சென்றுவாது முறையிட்டு நீதி காண வேண்டும்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews