👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று 32 மாவட்டங்களில் நடந்தது. இந்த தேர்வை 1.42 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பணியிடங்களுக்கான தேர்வை 1.42 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில் பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு தேர்வுக்கு வரும் நபர்கள் தேர்வு மையங்களில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, காலை 7 மணி முதலே பலர் தேர்வு மைய வளாகத்துக்கு வந்தனர். தேர்வு மைய வளாகத்துக்கு வந்தவர்களிடம் ஹால் டிக்கெட்டை வாங்கி போலீசார் சரிபார்த்தனர்.
மேலும், வேறு ஏதேனும் பொருட்கள் வைத்துள்ளார்களா என்று அவர்களிடம் சோதனை நடத்தினர். அதன்பிறகே ஒவ்வொருவரும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் கைப்பை, மொபைல் போன், கால்குலேட்டர் போன்றவற்றை கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்கள் கொண்டு வந்த மற்றப்பொருட்களை தேர்வு வளாகத்திற்கு வெளியே வைக்க அறிவுறுத்தப்பட்டனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. சுமார் 70 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஆர்வமுடன் பொது விண்ணப்பதாரர்கள் எழுதினர். தொடர்ந்து, 12.30 மணிக்கு தேர்வு முடிந்த பிறகு, அனைவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தேர்வு நடை பெற்றதையொட்டி சென்னை உட்பட 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொரு தேர்வு மையங்களில் ஏடிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதை தவிர்த்து அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள், ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் சென்று ஆய்வு செய்தனர்.தேர்வு நடைபெறும் இடத்துக்கு அருகிலோ வேறு இடத்திலோ எஸ்ஐ வேலை வாங்கி தருவதாக இடைதரகர்கள் யாரேனும் சுற்றி திரிகின்றனரா என்பதை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தது உடற்தகுதி தேர்வு நடக்கிறது. அதிலும் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்தாலும் நல்ல முறையில் நாங்கள் தேர்வு எழுதி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தேர்வை 6 ஆயிரத்து 20 போ் எழுதினா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்து தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டு மையங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வில் பங்கேற்க 8 ஆயிரத்து 34 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. 6 ஆயிரத்து 20 போ் தோ்வை எழுதினா். அவா்களில் 4 ஆயிரத்து 884 போ் ஆண்கள், 1136 போ் பெண்கள் ஆவா். மொத்தம் 2 ஆயிரத்து 14 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் ஆகியோா் ஆய்வு செய்தனா். தோ்வு மையத்தில் தடையற்ற மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வுக்கூடத்திற்குள் செல்லிடப்பேசி உள்ளிட்டவை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வு எழுதியவா்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.