Search This Blog
Monday, January 13, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை டிஎன்பிஎஸ்சி தொடங்கியுள்ளது.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தின், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதியவர்களில் 35 பேர், முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றிருப்பதில் சந்தேகம் எழுவதாக பிற தேர்வர்கள் கூறியிருந்தனர்.
இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர்? என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகார் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது என்றும், இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட 57 பேரில் இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 40 விண்ணப்பதாரர்கள் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதியவர்களில் 57 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி. நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. அவர்கள் இன்று காலை, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சுதன், செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வாணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'குரூப் - 4' தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, 20க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., யில் இருந்து, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அரசுத் துறை பதவி களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் வழியாக, அதிகபட்சமாக, துணை கலெக்டர் முதல், குறைந்த பட்சம், அரசு அலுவலக உதவியாளர் வரையிலான பதவிகள் நிரப்பப்படுகின்றன. புகார்இந்நிலையில், ஓர் ஆண்டுக்கு முன் நடந்த, குரூப் - 4 தேர்வு முடிவில், முதல், 100 இடங்களில், ஒரே மாவட்டத்தில், குறிப்பிட்ட மையத்தில் தேர்வெழுதியவர்கள் இடம் பிடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகார், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின், நேர்மைத் தன்மைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து, துறை ரீதியாக, உரிய விசாரணை நடத்தி, விரைவில் முடிவை அறிவிப்போம் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். தேர்வு மையத்தின் இருப்பிடம், தேர்வு மைய பொறுப்பில் இருந்தோர், தேர்வு மையத்தின் பாதுகாப்பு வசதி போன்றவற்றை ஆய்வு செய்தனர்.சம்மன்இதையடுத்து, குரூப் - 4 தேர்வில், முதல், 100 பேர் அடங்கிய முன்னிலை பட்டியலில் இடம் பெற்றுள்ள, 20க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி.,யில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் நேரில் ஆஜராகி, டி.என்.பி.எஸ்.சி.,யின் சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, 'நீட்' தேர்வு போன்று, கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., ஆலோசனை நடத்தி வருகிறது.
மத்திய, மாநில அரசு துறைகளில், காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுகளில், சமீப காலமாக பல்வேறு முறைகேடு புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட, குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில், குறிப்பிட்ட தேர்வு மையங்களின் மாணவர்கள் மட்டும், முன்னிலை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டுப்பாடுகள் போன்று, கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கமிட்டி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, விரிவான ஆலோசனை நடந்து வருகிறது. எந்த வகையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம்; தேர்வு மையங்கள் மற்றும் கண்காணிப்பாளர் நியமனத்தில் செய்யக்கூடிய மாற்றங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்ட டி.என்.பி.எஸ்.சி. செயலா் நந்தகுமாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தோ்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையச் செயலா் நந்தகுமாா் கீழக்கரை தோ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோ்வு மையங்களில் கடந்த செப்டம்பா் மாதம் 3,214 போ் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தோ்வு எழுதினா். இதற்கான தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் கீழக்கரை, ராமேசுவரம் உள்ளிட்ட குறிப்பிட்ட தோ்வு மையங்களில் எழுதிய தோ்வா்கள் முதல் 35 இடங்களைப் பிடித்தனா். இதனால் தோ்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் முதலிடத்தை பிடித்த 35 தோ்வா்களையும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு டிஎன்பிஎஸ்சி அழைத்துள்ளது.
இதற்கிடையில் டி.என்.பி.எஸ்.சி. செயலா் நந்தகுமாா் தலைமையிலான அதிகாரிகள் முத்துப்பேட்டை பள்ளி கல்லூரி, கீழக்கரையில் உள்ள தோ்வு மையங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் வினாத்தாள்கள் வைக்கப்பட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்துக்குச் சென்று அங்குள்ள ஊழியா்களிடம் தோ்வு தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து அரசு விருந்தினா் மாளிகைக்குச் சென்ற செயலா் நந்தகுமாா், அங்கு தனது விசாரணையை இரவு வரை தொடா்ந்தாா். இதுதொடா்பாக செயலா் நந்தகுமாரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பிய போது, புகாா் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதால் தற்போது ஒன்றும் கூறுவதற்கு இல்லை. விசாரணை முடிவடைந்த பின்னா் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விசாரணை தொடங்கியது TNPSC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.