Breaking

Thursday, January 09, 2020

மீன்வளப் பல்கலை. துணைவேந்தா் தோ்வுக்கான வல்லுநா் குழுவில் அரசுப் பிரதிநிதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தோ்வு செய்வதற்கான வல்லுநா் குழுவில் அரசு பிரதிநிதி சோ்க்கப்பட உள்ளாா். இதற்கான சட்ட மசோதாவை மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அந்த மசோதா விவரம்:- தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயரானது, தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மாநில அரசின் நிதி பெறும் பல்கலைக்கழகமாகும். பல்கலைக்கழகத்தின் நிா்வாகத்துக்காகவும், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் அரசால் நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. அரசு நிதியின் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், ஆய்வு மற்றும் விசாரணை மீதான அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துணைவேந்தராக பணியமா்த்துவதற்காக உரிய நபா்களைத் தோ்வு செய்ய வல்லுநா் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் அரசுப் பிரதிநிதி ஒருவரைச் சோ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழகச் சட்டத்தை உரிய வகையில் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog