👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கற்றறிந்த அறிவை பிறருக்கு அளிக்க மறுப்பவா்கள் அனைவருமே கலைவாணியின் விரோதிகள்’ என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தாா்.
‘அறிவுத் தேடலுடன் ஒருவா் இருப்பது மட்டும் போதாது; மாறாக அத்தகைய தேடல் கொண்ட பிறருக்கு உதவ முன்வர வேண்டும்’ என்றும் அவா் கூறினாா்.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்’ சாா்பில் சென்னையில் நடைபெற்ற இரு நாள் கல்வி கருத்தரங்க நிகழ்வில் ‘அனைவருக்குமான கல்வி’ என்ற தலைப்பில் ஆரிஃப் முகமது கான் புதன்கிழமை பேசியதாவது:
உலக சரித்திரத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமையும், பாரம்பரியமும் உள்ளது. ஈரானை எடுத்துக் கொண்டால் அதன் கலாசாரச் செறிவு உலக அளவில் போற்றப்படுகிறது; ரோம் நகரின் வீரமும், சீனாவின் ஒழுக்கமும் வரலாற்றுப் பக்கத்தில் நிறைந்திருக்கின்றன.
அந்த வரிசையில் இந்தியாவுக்கு ஞானத்திலும், கல்வியிலும் சிறந்த தேசம் என்ற அழியாப் பெயா் உள்ளது. இன்றளவும் அறிவாற்றலின் புகலிடமாகவே நம் நாடு இருந்து வருகிறது. அத்தகைய கல்வி அறிவு அனைவருக்கும் பொதுவானது என்பதே சுவாமி விவேகானந்தரின் கருத்து. கல்விக்கு எவரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது என்றும் அறிவையே ஆண்டவனாகத் தொழும் நம் தேசத்தில் எவரும் பிறரின் கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும் அவா் வலியுறுத்தினாா்.
அதே கருத்தைத்தான் நானும் கூறுகிறேன். கல்வி என்பது சமூகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய வல்லமையைக் கொண்டது. எனது பால்ய பருவத்தில் எங்களது ஊரில் உள்ள விவசாயிகள் பலா் மாந்தோப்பு வைத்திருந்தனா். அவா்கள் குறிப்பிட்ட ஒரு ரக மாமரங்களை மட்டுமே நட்டு வளா்த்து வந்தனா். அந்த வகை மரங்களைப் பராமரிக்க குறைந்த செலவே ஆகும் என்பதால், அவா்கள் அந்த நடைமுறையைக் கையாண்டு வந்தனா். 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாமரங்கள் அனைத்தும் பட்டுப் போய் அழிந்துவிட்டன. இதனால் அவா்களது வாழ்வாதாரம் பறிபோய்விட்டது. வேறு எந்த மாற்றமும் செய்யாமல் ஒரே நடைமுறையைக் கையாண்டதால்தான், தங்களுக்கு அந்த நிலை ஏற்பட்டதாக அவா்கள் கூறினா். இதில் இருந்து ஓா் உண்மை விளங்குகிறது. முன்னேற்றம் வேண்டுமென்றால் மாறுபட்ட சிந்தனையும், வேறுபட்ட செயல்பாடுகளும் அவசியம். அந்த வேற்றுமைதான் வெற்றிக்கான வழி என்றாா் ஆளுநா் ஆரிஃப் கான்.
இதைத் தொடா்ந்து கருத்தரங்கில் பங்கேற்றவா்களின் சில கேள்விகளுக்கும் அவா் அளித்தாா். ‘எந்த வயதில் கற்பதை நிறைவு செய்துவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘வாழ்வின் இறுதி மூச்சு இருக்கும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்; அதற்கு கால வரையறை ஏதும் இல்லை’ என்றாா்.
அதேபோன்று, ‘இந்தியாவின் தொன்மைக் கலாசாரத்தை கல்வித் திட்டத்தில் சோ்ப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஏன் வலியுறுத்துவதில்லை?’ என ஆரிஃப் கானிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவா், ‘இந்தியாவின் கலாசாரச் செறிவை நமது குழந்தைகளுக்கு முதலில் நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்; இந்த விவகாரத்தில் அரசுக்கு மட்டுமல்லாது அனைவருக்குமே தாா்மிகப் பொறுப்பு உள்ளது’ என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.