துணைவேந்தர் நியமனம் ரத்து நீதிமன்றம் இடைக்கால தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 08, 2020

Comments:0

துணைவேந்தர் நியமனம் ரத்து நீதிமன்றம் இடைக்கால தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர் பாலசுப்ரமணியன் நியமனத்தை ரத்து செய்த, தனி நீதிபதியின் உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இடைக்கால தடை விதித்தது. தஞ்சாவூர் பேராசிரியர் ரவீந்திரன், ஏற்கனவே தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழக அரசு, தேடுதல் குழுவை, 2018 ஜூலை, 2ல் அமைத்தது. குழுவில், இப்பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் கருணாகரன், முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் மணிவேல் இடம் பெற்றனர்.அரசாணைஅதே பல்கலையுடன் தொடர்புடைய இவர்கள், குழுவில் இடம் பெற்றது, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளுக்கு முரணானது. குழுவில், யு.ஜி.சி.,யின் பிரதிநிதி இடம் பெறவில்லை.துணைவேந்தர் பதவிக்கு நான் உட்பட பலர் விண்ணப்பித்தோம். ஆந்திரா திராவிட பல்கலையில் பணிபுரிந்த பாலசுப்ரமணியனை, தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தராக நியமித்து, 2018 அக்., 5ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அவர், அடிப்படை தகுதியான, சர்வதேச ஆய்வு கருத்தரங்கு எதுவும் நடத்தவில்லை. யு.ஜி.சி., விதிகள்படி, துணைவேந்தருக்குரிய போதிய தகுதிகள் பெற்றிருக்கவில்லை. நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளது. பாலசுப்ரமணியனை துணைவேந்தராக நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.
விசாரித்த தனி நீதிபதி, 'துணைவேந்தராக பாலசுப்ரமணியனை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என, டிச., 20ல் உத்தரவிட்டார். மேல்முறையீடுஇதை எதிர்த்து, பாலசுப்ரமணியன் மற்றும் பல்கலை தரப்பில், 'தேடுதல் குழு அமைத்தபோது கருணாகரன் மற்றும் மணிவேல், பல்கலையில் எவ்வித பதவியிலும் இல்லை. இதன் அடிப்படையில், துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்தது, விதிகள் படி ஏற்புடையதல்ல.'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்' என, மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள், எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை, ஜன., 10க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர். தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews