Search This Blog
Tuesday, January 07, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என ஊதிய குறைதீர் குழு நீதிபதி முருகேசனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்' என தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜோசப் சேவியர், பொது செயலாளர் காமராஜ் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: ஆசிரியர்கள் போராட்டத்தால் 1988ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் ரூ.1,200 என நிர்ணயிக்கப்பட்டது. 1996ல் அடிப்படை சம்பளம் 4,500 ஆனது.2006 ஜனவரில் மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் என அறிவித்து 1.86- ஆல் பெருக்கி அதை அடிப்படை சம்பளம் எனவும், தர ஊதியமும் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர் சம்பளம் ரூ.13,500 என மத்திய அரசு வழங்கியது. ஆறாவது சம்பளக் குழுவில் இடைநிலை ஆசிரியருக்கு அடிப்படை சம்பளத்தில் ரூ.5,750 வரை பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 7 வது சம்பளக்குழுவில் ரூ.20 ஆயிரம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2006 ஜனவரி வரை தேர்வு நிலை, சிறப்பு நிலை சம்பள நிர்ணயம் செய்யும் போது சம்பள உயர்வு அளித்து தனி ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. இதே நடை முறையை பின்பற்றவேண்டும். பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முந்தைய பணியிடத்தில் பெற்ற சம்பளத்தை விட குறையும் சூழலில், கடந்த சம்பளக் குழுவில் இழப்பு சரி செய்யப்பட்டது.
இதேபோல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம்பள இழப்பை சரி செய்ய வேண்டும். இவ்வாறு குறைதீர் குழு நீதிபதியிடம் வேண்டு கோள் வைத்துள்ளோம், என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
ASSOCIATION
SALARY/INCREMENT
SGT
மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம்: ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்
மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம்: ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.