Breaking

Tuesday, January 07, 2020

பள்ளிகள் திறப்பு; புத்தகம் வினியோகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே, மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு, டிச., 23ல் முடிந்தது; மறுநாள் முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் ஜன., 2ல் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.பின், உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, பள்ளிகள் திறப்பு, ஜன., 6க்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, 13 நாட்கள் விடுமுறை கழிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஏற்கனவே பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டதால், பள்ளி திறந்த முதல் நாளிலேயே, மூன்றாம் பருவ பாட வகுப்புகள் துவங்கின.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog