👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கான கட்டுமானத்தை துவக்குவதில், பொதுப்பணி துறைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.பொதுப்பணித் துறையில் கட்டடங்கள் பிரிவு வாயிலாக, அரசின் பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
இதற்காக, மாநிலம் முழுவதும், 12 கோட்டங்கள் செயல்படுகின்றன; தேவையான பொறியாளர்கள், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவத் துறைக்கான கட்டடங்கள் கட்ட, கட்டடங்கள் பிரிவில், மருத்துவ கோட்டம் என்ற தனிப்பிரிவு உள்ளது. மருத்துவத் துறை கட்டடங்கள் பராமரிப்பையும், இந்த பிரிவு தான் மேற்கொள்கிறது. நடவடிக்கைஇந்த பிரிவிற்கு, சென்னை, மதுரை, திருச்சி என, மூன்று கோட்டங்கள் மட்டுமே உள்ளன. இங்கிருந்து, மற்ற மாவட்டங்களுக்கு சென்று, பணியை கண்காணிக்க வேண்டிய நிலையில், இப்பிரிவு உயர் அதிகாரிகள் உள்ளனர்.மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறையை மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவுப்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல், மாவட்ட அரசு மருத்துவனைகள் வரை, புதிய கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்டவற்றில், பல கோடி ரூபாய் கடனுதவி பெறப்பட்டுள்ளது. இருப்பினும், போதிய பொறியாளர்கள் இல்லாததால், புதிய பணிகளை துவங்க முடியாமலும், துவங்கிய பணிகளை முடிக்க முடியாமலும், மருத்துவ கோட்ட பிரிவினர் திணறி வருகின்றனர்.
அனுமதி
இந்நிலையில், ஒன்பது மாவட்டங்களில், புதிதாக மருத்துவக் கல்லுாரிகள் கட்ட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு கல்லுாரியும், 325 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. கட்டுமானப் பணிகளை விரைந்து துவங்கினால், அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க முடியும்.தற்போது, அரியலுார், கள்ளக்குறிச்சி, கடலுார், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும், மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, அரசு அனுமதி அளித்து உள்ளது. ஆனால், மருத்துவக் கல்லுாரிகள் அமையவுள்ள இடங்களில், மருத்துவ கோட்டத்தில், பொறியாளர் மற்றும் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதனால், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் உள்ள பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களை பயன்படுத்தி, இப்பணிகளை முடிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், அதற்கு மருத்துவக் கோட்ட பொறியாளர்கள் எதிர்ப்பு காட்டுவதால், சிக்கல் எழுந்துள்ளது. இப்பிரச்னையில், முதல்வர் இ.பி.எஸ்., தலையிட்டு தீர்வு கண்டால், பிரச்னை தீரும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.