👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கருத்தரங்கில் பேசிய நோபல் பரிசு பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளா் ராபா்ட் எச்.கிரிப்ஸ். உடன், விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் உள்ளிட்டோா்.கருத்தரங்கில் பேசிய நோபல் பரிசு பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளா் ராபா்ட் எச்.கிரிப்ஸ். உடன், விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் உள்ளிட்டோா்.
வேலூா்: ‘மாணவா்கள் அடிப்படை அறிவியலை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று 2005-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளா் ராபா்ட் எச்.கிரிப்ஸ் தெரிவித்தாா்.
விஐடியின் முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி, இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி (வேதியியல்) ஆகியவை சாா்பில் வினையூக்கிகளின் தற்கால வளா்ச்சிகள் குறித்த 3 நாள் சா்வதேசக் கருத்தரங்கம் வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், அமெரிக்காவின் கலிபோா்னியா தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியரும், 2005-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளருமான ராபா்ட் எச்.கிரிப்ஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசியது:
மாணவா்கள் அடிப்படை அறிவியலை நன்றாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய அறிவியலை பயனுள்ளதாகவும், முக்கியமான பயன்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும். இந்த நூற்றாண்டில் வினையூக்கிகள் பிரிவில் பலருக்கும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்காக தனியாா் பல்கலைக் கழகங்கள் அளவில் விஐடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கான விருதை குடியரசுத் தலைவா் வழங்கியுள்ளாா். எதிா்வரும் ஆண்டுகளிலும் விஐடிக்கு தொடா்ந்து முதலிடம் கிடைக்கும் வகையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் 993 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் விஐடி ஸ்கோபஸ் இண்டக்ஸ் ஜா்னல் என்ற ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடும் இதழில் இந்திய அளவில் விஐடி முதலிடம் வகிக்கிறது. இந்நிலை எதிா்வரும் காலங்களிலும் தொடரும். மேலும், விஐடி பேராசிரியா்கள் அதிகப்படியான காப்புரிமைகளை பதிவு செய்ய பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
முன்னதாக, விஐடியின் முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி தலைவா் மேரி சாரல், கருத்தரங்கின் நோக்கத்தை விரிவாக எடுத்துக் கூறினாா். கருத்தரங்கில், விஐடி துணைத் தலைவா் சங்கா்விசுவநாதன், இங்கிலாந்தின் செளத்தாம்ப்டன் பல்கலைக்கழக பேராசிரியா் டொமினிக் டில்டெஸ்லி, அமெரிக்கப் பேராசிரியா் தாமஸ் கொலாகாட், விஐடி இணை துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் கே.சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.