Breaking

Tuesday, January 07, 2020

அண்ணா பல்கலை பிரிப்பு கருத்து கேட்க அரசு முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'அண்ணா பல்கலையை இரண்டாக பிரிப்பது தொடர்பாக, இம்மாதம் இறுதியில், கல்வியாளர்களை அழைத்து கருத்து கேட்கப்படும்,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். அண்ணா பல்கலையை, ஒப்புயர்வு உயர் கல்வி நிறுவனமாக, மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அண்ணா பல்கலை, மாநில சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட, மாநில பொது பல்கலையாக இருந்துவருகிறது.எனவே, ஒப்புயர்வு உயர் கல்வி நிறுவனம் என்ற, தகுதி நிலையை அடைந்த பிறகும், தொடர்ந்து மாநில சட்டத்தின் கீழ் இயங்கும். மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கை, தொடர்ந்து அதற்கு பொருந்தும் என, மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்யவும், அண்ணா பல்கலையை, இரண்டாக பிரிப்பது குறித்து முடிவு செய்யவும், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.இக்குழுவின் முதல் கூட்டம், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. ஐந்து அமைச்சர்கள், நிதி, உயர் கல்வி, பள்ளிக் கல்வி, சட்டத் துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் குறித்து, அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:அண்ணா பல்கலையை பிரிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்காக, அரசு சார்பில், குழு அமைக்கப்பட்டது.இக்குழு கூடி, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தது. அடுத்த கூட்டம், இம்மாதம் இறுதி யில் நடக்கும். அப்போது, கல்வியாளர்களை அழைத்து, அவர்களின் கருத்து கேட்கப்படும். அண்ணா பெயரில் பல்கலை இருக்கும்; அதில், மாறுபட்ட கருத்து இல்லை. தி.மு.க., பெற்ற ஓட்டு சரிந்து விட்டது என்ற அடிப்படையில், தி.மு.க.,விற்கு தேய்பிறை என்றேன். லோக்சபா தேர்தலில், 37 லோக்சபா தொகுதிகளில் வென்றனர். அப்போது பெற்ற ஓட்டுகளை, தற்போது பெறவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக அமைச்சர்கள் குழு முதற்கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சர் சண்முகம், உயர்கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog