Search This Blog
Tuesday, January 07, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் ( ராமேஸ்வரம், கீழக்கரை) தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதன் செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
'குரூப் - 4 தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு, 2019, செப்டம்பரில் நடந்தது; 16 லட்சம் பேர் பங்கேற்றனர்; முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டன. இதில் முதல், 100 இடங்களுக்கான பட்டியலில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில், தேர்வு எழுதியோர் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன. சரிபார்ப்புஇது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி.,யின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு, குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது, எந்த பாரபட்சமும் இன்றி, மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், எட்டு தாலுகாக்களில், 128 தேர்வு மையங்களில், 33 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 497 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம்பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய, 57 பேர், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுஉள்ளனர். இவர்களில், 40 பேர், முதல், 1,000 இடங்களுக்கான பட்டியலிலும், அவர்களில், 35 பேர், முதல், 100 இடங்களுக்கான பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.துவங்கியதுமொத்தம், 57 பேரில், 17 பேர் மட்டும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்ற, 40 பேர் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்கள், ஒரே தேர்வு மையத்திலோ அல்லது ஒரே தேர்வு கூடத்திலோ தேர்வு எழுதவில்லை. ராமேஸ்வரத்தில், ஆறு மற்றும் கீழக்கரையில், மூன்று மையங்களில் பரவலாக தேர்வு எழுதியவர்கள் ஆவர். ஆனாலும், இந்த குற்றச்சாட்டு குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள், தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் மிகுந்த கவனமுடன் ஆய்வு செய்யப்படுகின்றன. இதில், எவ்வித பாரபட்சமுமின்றி விசாரணை செய்யப்பட்டு, உண்மை நிலை விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த விசாரணையில் தவறுகள் கண்டறியப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது, சட்டப்படி மிக கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, 2017ல் நடந்த, 'குரூப் - 2ஏ' தேர்விலும், முதல், 100 இடங்களில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக, மற்றொரு புகார் எழுந்து உள்ளது.
இதுகுறித்தும், டி.என்.பி.எஸ்.சி., விசாரணை நடத்தி வருகிறது.விசாரணை அவசியம்: ராமதாஸ் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், ராமேஸ்வரம், கீழக்கரையில், அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில், தேர்வு எழுதியவர்கள், முதல், 100 இடங்களில், 40 இடங்களை பிடித்து இருப்பது, பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.கடந்த, 2017 - 18ம் ஆண்டு நடைபெற்ற, குரூப் 2 - ஏ தேர்வுகளில், முதல், 50 இடங்களைப் பிடித்தவர்களில், 30 பேர், இந்த மையங்களைச் சேர்ந்தவர்கள் என்பது, சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளிக்க வேண்டும். அதிகம் பேர் முதலிடம் பெற்ற தேர்வு மையங்களில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தேடி வந்து, தேர்வு எழுதியிருப்பது இயல்பாக நடந்த ஒன்றா; திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடா என்பது குறித்து, விளக்கம் தேவை. இதில் முறைகேடு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
'குரூப் - 4' தேர்வு முறைகேடு : கடும் நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.