உங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் இருந்தாலே போதும்! உங்கள் பணம் அபேஸ்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2020

Comments:0

உங்கள் ATM கார்டின் 16 இலக்க எண் இருந்தாலே போதும்! உங்கள் பணம் அபேஸ்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
டிஜிட்டல் இந்தியாவின் ஒவ்வொரு ஒவ்வொரு குடிமகனும், பணம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் பேங்க் அக்கௌண்ட் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு விட்டோம். இந்தியாவில் இப்போது ஆன்லைன் பரிவர்த்தனை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது. பெட்டிக்கடைகளில் கூட Paytm மூலம் பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டது. இந்த அசுர வளர்ச்சி ஒரு பக்கம் நன்மைதான் என்றாலும் அதற்கு இணையாக ஆபத்துகளும் அதிகம் என்பது பலருக்கும் தெரிவதில்லை!நமது பெரும்பாலான பரிவர்த்தனைகளை ATM கார்டுகள் மூலமாகவே செய்கின்றோம்.
நமது வங்கிகளும் பல்வேறு கட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இப்பொது நாம் ஒரு ATM-ல் பணம் எடுக்கச் சென்று மூன்று முறைகளுக்கு மேல் தவறான எண்ணை அழுத்தினால் நமது ATM கார்டு லாக் செய்யப்படும். பின் வங்கி கிளையை அணுகித்தான் அதை ரிலீஸ் செய்யமுடியும். அதே போல் நாம் ATM கார்டு பயன்படுத்தி ரீசார்ஜ் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யும் போது OTP எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் நமது செல்போன் எண்ணிற்கு வரும். அதை உள்ளிட்ட பிறகே பரிவர்த்தனை நிறைவு பெறும். அதுமட்டுமில்லாமல் Two Factor Authentication எனப்படும் பாதுகாப்பு அம்சத்தையும் பயன்படுத்தி நாம் நமது பணத்தை பாதுகாத்து கொள்ளலாம்.
OTP உள்ளிட்ட பிறகு தான் பரிவர்த்தனை நிறைவு பெறும் என்ற நிலை மாறி ரொம்பகாலம் ஆகிவிட்டது. உங்களது ATM கார்டின் 16 இலக்க எண் மற்றும் பின்பக்கம் இருக்கும் CVV என்ற மூன்றிலக்க எண் இவை தெரிந்தாலே போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் பணத்தை, உங்கள் அனுமதி இல்லாமலே எடுத்துவிட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா .!? எப்படி இந்த அநியாயம் நடக்கிறது என்று பார்ப்போம். வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு RBI-ன் விதிமுறைகள் செல்லுபடியாகாது. எனவே உங்கள் ATM கார்டை பயன்படுத்தி வெளிநாட்டு பரிவர்த்தனை செய்யும் போது உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வராது. OTP இல்லாமலேயே பரிவர்த்தனை முடிந்துவிடும்.
screen capture of HDFC Bank Account உங்கள் கணக்கிலிருந்து வெளிநாட்டு வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றினால் OTP வராமலேயே பரிவர்த்தனை பக்குவமாக நடந்துமுடிந்து விடும். உங்கள் பணத்தை திருடும் ஹேக்கர்கள் Dark web மூலம் இந்த பரிவர்த்தனையை செய்வதால் எந்த வங்கி கணக்கிற்கு பணம் போகிறது என்ற தகவல் கூட தெரியாது. இன்னும் சில நேரங்களில் நம் எண்ணிற்கு பணம் எடுத்தால் வருகிற மெசேஜ் கூட வராமல் தடுத்து அக்கௌன்ட்டில் உள்ள பணம் அனைத்தையும் சுருட்டிவிடுவார்கள்.
இதை தடுப்பதற்கும் வழி உள்ளது. இப்போது எல்லா வங்கிகளும் தங்களுக்கென தனி App வைத்திருக்கின்றனர். அதை பயன்படுத்தி உங்கள் அக்கவுண்ட்டின் International Transactions என்பதை off செய்துவிட்டால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து வெளிநாட்டு பரிவர்த்தனைகள் செய்யமுடியாது. App-ல் இந்த வசதி இல்லாவிட்டால் customer care அதிகாரிகளுக்கு போன் செய்தோ அல்லது வங்கி கிளையை அணுகியோ International Transactions-யை off செய்து கொள்ளலாம். இப்போதே மேலே சொன்ன வழிமுறையை பின்பற்றி உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews