IBPS வாரியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய வேலை வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 16, 2019

Comments:0

IBPS வாரியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய வேலை வாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் தற்போது இந்தியா முழுவதும் IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: IT-Administrator
வயதுவரம்பு: 21 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Professor
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Faculty Research Associate
வயதுவரம்பு: 27 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பணிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புப்படி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://ibpsonline.ibps.in/ibpsafidec19
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews