Breaking

Wednesday, January 08, 2020

ஏ.டி.எம்., கார்டு: அஞ்சல்துறை அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அஞ்சல் துறை வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது மின்காந்த, ஏ.டி.எம்., கார்டை, 'சிப்' பொருத்திய ஏ.டி.எம்., கார்டாக, வரும், 31ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து, சென்னை அஞ்சல் துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அஞ்சல் துறை வங்கி, மின்காந்த ஏ.டி.எம்., கார்டை, 'சிப்' பொருத்திய, ஏ.டி.எம்., கார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதன்படி, மின்காந்த, ஏ.டி.எம்., கார்டுகள், ஜனவரி, 31க்குப் பின் செயல்படாது. எனவே, வாடிக்கையாளர்கள், தங்கள் அஞ்சலக கிளைக்கு சென்று, இ.எம்.வி., 'சிப்' பொருத்திய, ஏ.டி.எம்., கார்டை, வரும், 31ம் தேதிக்கு முன் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தபால் துறையின், ஏ.டி.எம்., 'மேக்னடிக் கார்டு' பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அவற்றை, 'சிப்' கார்டாக மாற்ற, ஜன., 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தபால் துறையில், சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு, 2017 முதல், ஏ.டி.எம்., கார்டுகள் வினியோகிக்கப்படுகின்றன. இதற்காக, அஞ்சலகங்களில், ஏ.டி.எம்., மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.ரிசர்வ் வங்கிஇத்திட்ட துவக்கத்தில், மேக்னடிக் - ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கப் பட்டன. இவ்வகை கார்டுகளில் மோசடிகள் அதிகரிப்பதாக புகார் எழுந்ததால், 'சிப்' பொருத்தப்பட்ட கார்டுகளை மட்டும் பயன்படுத்த, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
இதனால், ஓராண்டாக, வாடிக்கையாளர்களுக்கு, சிப் பொருத்தப்பட்ட, ஏ.டி.எம்., கார்டுகள் மட்டுமே வினியோகிக்கப் பட்டு வருகின்றன. பழைய, ஏ.டி.எம்., கார்டுகள் மாற்றப்பட்டு, சிப் பொருத்திய புதிய கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.'மேக்னடிக்'ஆனாலும், பல வாடிக்கையாளர்கள், பழைய, 'மேக்னடிக்' கார்டுகளை மாற்றாமல் வைத்துஉள்ளனர். பழைய கார்டுகளின் செயல்பாடுகளை, ஜன., 31க்குள் முடக்க, அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. எனவே, 'வாடிக்கையாளர்கள் ஜன., 31க்குள் அருகில் உள்ள தலைமை அஞ்சலகம், கிளை அஞ்சலகங்களை அணுகி, 'மேக்னடிக்' கார்டுகளை ஒப்படைத்து, புதிய, 'சிப்'கார்டுகள் பெற வேண்டும்' என, தபால் துறை அறிவுறுத்தி உள்ளது. - நமது நிருபர் -
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog