தமிழக அரசில் கால்நடை ஆய்வாளர் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 11, 2019

Comments:0

தமிழக அரசில் கால்நடை ஆய்வாளர் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புயில் காலியாக 583 கால்நடை ஆய்வாளர் நிலை-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கால்நடை ஆய்வாளர் நிலை-II
காலியிடங்கள்: 583
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 11 மாத கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த பின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கால்நடை ஆய்வாளர் நிலை-2 ஆக பணி நியமனம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் சம்பளம், உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
வயதுவரம்பு: பொது பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் 46 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.100, இதனை The Director, Animal Husbandry and Veterinary services, Chennai-35 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் , எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை - 35 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://cms.tn.gov.in/sites/default/files/announcement/LI_notification_021219_0.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews