செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்: வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 11, 2019

Comments:0

செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்: வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீடாமங்கலம்: ஒற்றை செம்பருத்தி பூவின்(சிகப்பு நிறம்) நன்மைகள் பற்றி நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வனிதாஸ்ரீ,ராமசுப்ரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது. செம்பருத்தி என்பது இந்தியா,இலங்கை போன்ற வளர்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும்.இது செடி இனத்தைச் சார்ந்தது. இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும்.இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் தேசிய மலராகும்.
பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. பல வகையான பூக்கள் உலகெங்கிலும் இருக்கின்றன. இவற்றில் சில மிகுந்த அழகையும்,வாசனை கொண்டவையாகவும் இருக்கின்றன.வேறு சில பூக்கள் மனிதர்களின் நோய்களை போக்கும் குணம் பெற்றவையாக இருக்கிறது.அப்படிபட்ட பூவினங்களில் ஒன்றுதான் செம்பருத்தி பூவினால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பலன்கள் ஏராளம் என்றும் அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளனர்.
மாதவிடாய் பிரச்னைகள்: பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தம்போக்கு சிலருக்கு ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
சிறு நீர்:ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகும்.கோடை காலங்களில் நீர் சுருக்கு ஏற்படுவதாலும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உண்டாகும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும்.நீர்சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் எரிச்சலை நீக்கும்.நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி ரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும். இதயம்: இதயம் சம்மந்தமான பிரச்சினைகளுக்கு செம்பருத்தி பூ நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான ஒரு இயற்க்கை மருந்தாகும். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ,காயவைத்து பொடி செய்வதோ வைத்துக்கொண்டு பாலில் கலந்து காலை,மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் நீங்கும்.
புண்கள்: கோடைகாலங்களிலும்,மருத்துவமனைகளில் நீண்ட காலம் இருக்கும் பலருக்கும் உடல் சூடு காரணமாக வாய்ப்புண் ,வயிற்றுப்புண் உண்டாகும்.அவர்கள் தினம் 10 செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் அனைத்து புண்களும் விரைவில் ஆறும்.ஒருமாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும.செம்பருத்திபூவில் நச்சுகளை அழிக்கும் வேதிப்பொருள்கள் அதிகம் உள்ளது.தினமும் காலை நேரங்களில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்க பெற்று ரத்தம் சுத்தமாகி உடலை புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்கிறது.
இரும்பு சத்து: ரத்தம் விருத்தி ஆவதற்கும்,உடலின் பலத்திற்கும் இரும்பு சத்து மிகவும் அவசியமாக இருக்கிறது. செம்பருத்தி பூ இதழுடன் சம அளவு எடை மருதம் பட்டைத்தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை,மாலை சாப்பிட ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரிப்பதோடு ரத்த சோகை நோய் கரையும். சருமம் உமலின் மேற்பார்வையாக இருக்கும் தோல் அல்லது சருமத்தில் ஈரபதம் இருப்பது அவசியம்.செம்பருத்தி பூ குளிர்ச்சி மற்றும் ஈரபதத்தை அளிக்கும் தன்மை கொண்டது.இந்த பூவை சாப்பிடுவதாலும் அரைத்து சருமத்தில் தேய்த்து கொள்வதாலும் சருமத்திற்கு இதமும் சுகமும் அளித்து உடலை பள பளக்க செய்யும்என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews