அந்த வகையில் எஸ்.பி.ஐ ஏழு வகையான டெபிட் கார்டுகளை வழங்கி வருகிறது.
இந்த ஏடிஎம் கார்டுகள் கிளாசிக் (Classic) மறும் மேஸ்ட்ரோ கார்டு (Maestro Debit card), குளோபல் இண்டர்நேஷனல் டெபிட் கார்டு, கோல்டி இண்டர்நேஷனல் கார்டு, பிளாட்டினம் இண்டர்நேஷனல் கார்டு உள்ளிட்ட பல கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் இந்த கார்டுகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வரம்பிற்கு பண வரம்பை உயர்த்தியுள்ளது.
ஏடிஎம் கார்டுகளுக்கான வரம்பு மற்றும் பணம் எடுக்கும் வரம்பு உள்ளிட்ட சில வற்றை பற்றித் இந்த கட்டுரையில் பார்க்க போகுகிறோம். எஸ்பிஐயில் கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ கார்டுகள் தான் மிகப் பிரபலமான கார்டுகளாகும். இதில் பணம் எடுக்கும் வரம்பு 20,000 ரூபாயாகும். சரி இந்த கார்டு பெறுவதற்கு ஏதேனும் கட்டணம் இருக்கா என்றால் இல்லை. இந்த கார்டிற்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம், ஜிஎஸ்டியோடு சேர்ந்து 125 ரூபாயாகும். இதே இந்த அட்டைக்கு மாற்று கட்டணங்கள் ஜிஎஸ்டியோடு சேர்த்து 300 ரூபாயாகும்.
எஸ்பிஐ குளோபல் இண்டர் நேஷனல் டெபிட் கார்டு
இதே எஸ்பிஐ குளோபல் இண்டர் நேஷனல் டெபிட் கார்டு உலகம் முழுவதிலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் பணம் எடுக்கும் வரம்ப்பு 40,000 ரூபாயாகும். இதன் வருடாந்திர பராமரிப்பு செலவு ஜிஎஸ்டியோடு சேர்த்து 175 ரூபாயாகும். இதே இந்த கார்டை மாற்ற மாற்று கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியோடு சேர்த்து 300 ரூபாயாகும்.
எஸ்பிஐ கோல்டு இண்டர்நேஷனல் எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ கோல்டு இண்டர்நேஷனல் டெபிட் கார்டை வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கவும், ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பணம் எடுக்கவும் இந்த கார்டை பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த கார்டின் பணம் எடுக்கும் வரம்பு 50,000 ரூபாயாகும். இந்த கார்டை பெற 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். இதற்கு வருடாந்திர பராமரிப்புக்கு கட்டணம் 175 ரூபாயாகும். இதற்கு கார்டு பரிமாற்ற கட்டணம் 300 ரூபாயாகும்.
இதே எஸ்பிஐ பிளாட்டினம் இண்டர்நேஷனல் டெபிட் கார்டு, இந்த டெபிட் கார்டை உலகம் முழுவதும் பயன்படுத்த முடியும். இந்த கார்டை வைத்து 1 லட்சம் ரூபாய் வரை பணத்தை எடுக்கலாம். இந்த கார்டை பெற 100 ரூபாய் கட்டணமும், இதே இந்த கார்டுக்குப் பராமரிப்பு கட்டணம் 175 ரூபாய் ஆகும். இதே கார்டை மாற்று செய்ய 300 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது.
எஸ்பிஐ இன்ஃபோடெக் டேப் & டே டெபிட் கார்டு கட்டணம்
இதே எஸ்பிஐ இன்ஃபோடெக் டேப் & டே டெபிட் கார்டு இந்த டெபிட் கார்டை மல்டி உபயோகமாக பயன்படுத்தலாம். காண்டெக்லெஸ் டெபிட் கார்டாக பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வசதியை இந்த கார்டில் மேம்படுத்துகின்றன. இது தவிர வணிகர்கள் இந்த கார்டின் மூலம் விரவாக பணம் செலுத்த இது உதவுகிறது. இதன் பணம் எடுக்கும் வரம்பு 40,000 ரூபாயாகும். இதன் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் 175 ரூபாயாகும்,. இந்த கார்டை மாற்ற மாற்று கட்டணமாக 300 ரூபாயும் பெறப்படுகிறது.
எஸ்பிஐ மும்பை மெட்ரோ காம்போ கார்டை இரண்டு விதமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பணம் எடுக்கும் டெபிட் கார்டாகவும், இதனை ஆக்சஸ் கார்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கார்டை பெற 100 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் வருடாந்திர பராமரிப்பு மற்றும் கார்டு மாற்ற கட்டணம் மற்ற கார்டுகளுக்கு போலவே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
எஸ்பிஐ மை கார்டு இண்டர் நேஷனல்
இதே எஸ்பிஐ மை கார்டு இண்டர் நேஷனல் டெபிட் கார்டு மூலம், 40,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த கார்டை பெற 250 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டியிருக்கும். இதே போல் வருடாந்திர பராமரிப்பு கட்டனமாக 175 ரூபாயும், இதனோடு ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டியிருக்கும். இது தவிர கார்டு ரீபிளேஸ்மென்ட் கார்டு கட்டணம் 250 ரூபாய் + ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டியிருக்கும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.