NIFT கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 11, 2019

NIFT கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் 2020ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவன வளாகங்கள்: டெல்லி, மும்பை கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், காந்திநகர், ரேபரேலி, பாட்னா, கங்க்ரா, கண்ணூர், போபால், ஷில்லாங், புவனேஷ்வர், ஜோத்பூர், படிப்புகள்: பி.டெஸ், பி.எப்டெக்., எம்.டெஸ்., எம்.எப்.எம்., மற்றும் எம்.எப்டெக்., உள்ளிட்ட படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள். தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, அதிகபட்ச வயது 23 ஆண்டுகள். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு. 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப தகுதி மாறுபடும். முதுநிலை படிப்புகளுக்கு, அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பொதுவாக, இந்த படிப்புகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றபோதிலும், சில பாடப்பிரிவுகளுக்கு தகுதி மாறுபடும்.
மாணவர் சேர்க்கை முறை: இளநிலை பட்டப்படிப்புகளுக்கு &'சேட்&' மதிப்பெண்ணும், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜிமேட் / ஜி.ஆர்.இ., மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் அல்லது என்.ஐ.எப்.டி., கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு, சூழ்நிலை தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனலைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31, 2019 நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 19, 2020 விபரங்களுக்கு: https://nift.ac.in/
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews