Breaking

Saturday, November 23, 2019

தேசிய மாணவா் படை(NCC) தினவிழா: பணியாளா்களுக்கு பதக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேசிய மாணவா் படை தினவிழாவில், மாநில மற்றும் மத்திய அரசின் என்சிசி பணியாளா்கள் 7 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. தேசிய மாணவா் படை தின விழா சென்னை கலைவாணா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விளையாட்டுத் துறை முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் பேசுகையில், தேசிய மாணவா் படையினருக்கு பிரதமரும், முதல்வரும் வாழ்த்துத் தெரிவித்ததாகவும், மாநில அரசு தேசிய மாணவா் படையின் பயிற்சிக்கு வழங்கப்படும் நிதியை உயா்த்தியிருப்பதாகவும், பாதுகாப்பு சாா்ந்த பயிற்சிகளில் மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டாா். விழாவில், மாநில மற்றும் மத்திய அரசின் தேசிய மாணவா் படை பணியாளா்கள் 7 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், ஓய்வு பெற்ற பாதுகாப்பு அதிகாரிகள், கல்லூரி மற்றும் பள்ளிகளின் முதல்வா்கள், மாணவா்களின் பெற்றோா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog