CBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் CBSE கல்வி வாரியத்தில் வேலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 24, 2019

Comments:0

CBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் CBSE கல்வி வாரியத்தில் வேலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) காலியாக உள்ள உதவி செயலர், மொழிப் பெயர்ப்பாளர், சுருக்கெழுத்தாளர், கணக்காளர் உள்ளிட்ட சுமுர் 357 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 357
பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-
உதவி செயலர் - 14
உதவிச் செயலர் (ஐடி) - 07
ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில், கூடுதலாக தர ஊதியம் ரூ.6,600 வழங்கப்படும்.
Analyst (IT) - 14
ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில், கூடுதலாக தர ஊதியம் ரூ.5,400 வழங்கப்படும்.
இளநிலை இந்தி மொழிப் பெயர்ப்பாளர் - 08
ஊதியம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில், கூடுதலாக தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.
மூத்த உதவியாளர் - 60
சுருக்கெழுத்தாளர் - 25
கணக்காளர் - 06
ஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில், கூடுதலாக தர ஊதியம் ரூ.2,400 வழங்கப்படும்.
இளநிலை உதவியாளர் - 204
இளநிலை கணக்காளர் - 19
ஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில், கூடுதலாக தர ஊதியம் ரூ.1,900 வழங்கப்படும்.
கல்வித் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம், பொறியியல் துறை ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி(ஐடி), ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு எம்.ஏ (இந்தி) முடித்தவர்கள், 12ம் வகுப்பு முடித்து தட்டச்சு தகுதி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 27 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cbse.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : குரூப்-ஏ பணியிடங்களுக்கு ரூ.1,500, குரூப்-பி மற்றும் சி பணியிடங்களுக்கு ரூ.800 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சிபிஎஸ்இ பணியாளர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.12.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.cbse.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews