Search This Blog
Tuesday, November 26, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கழிப்பறையை சுத்தம் செய்ய, ஆசிரியர்கள் வலியுறுத்துவதால், ஆற்காடில், பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலுார் மாவட்டம், ஆற்காடு மாசாபேட்டையில் உள்ள, நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 120 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.நேற்று காலை, 10:00 மணிக்கு, பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள், பள்ளியின் நுழைவுவாயில் கதவை பூட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆற்காடு போலீசார் பேச்சு நடத்தினர். அதில், 'மாணவ - மாணவியரை, பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ய, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். மறுத்தால், வீட்டுக்கு அனுப்புகின்றனர்' என, பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, 'கழிப்பறையை சுத்தம் செய்யும் பணிக்கு, மாணவர்களை ஈடுபடுத்த மாட்டோம்' என, போலீசார் முன்னிலை யில், ஆசிரியர்கள் கூறியதையடுத்து, மதியம், 12:00 மணிக்கு, மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.பள்ளிக்கு பூட்டுவேலுார் அருகே, துத்துக்காட்டில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 172 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் மட்டும் உள்ளனர். கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும்படி, கல்வித்துறை அதிகாரிகளிடம், பெற்றோர் பலமுறை மனு அளித்தனர்; நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, பள்ளிக்கு பூட்டு போட்டு, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விரைவில், கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து, மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
PROTEST
STUDENTS
கழிப்பறையை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல் - பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்
கழிப்பறையை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல் - பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.