👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரை சேர்ந்த சிறுவன், 9 வயதில் பல்கலையில் பட்டம் வாங்க உள்ளார். இதன் மூலம், உலகளவில் இளம் வயது பட்டதாரி என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது.
லாரன்ட் சிமன்ஸ் என்ற அச்சிறுவன், எய்ந்தோவன் தொழில்நுட்ப பல்கலையில், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் வரும் டிசம்பர் மாதம் பட்டம் பெற உள்ளார். இந்த பாடப்பிரிவானது, சராசரியாக படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு கூட கடினமானதாக இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெல்ஜியத்தில் பிறந்த லாரன்ட் சிமன்ஸ், 8 வயதில், மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்தார். அடுத்த மாதம் பட்டப்படிப்பை முடிக்க உள்ளார். பட்டப்படிப்பை வெறும் 9 மாதங்களிலேயே அவர் முடித்துவிட்டார். பிஎச்டி படிக்க திட்டமிட்டுள்ள அந்த மாணவர், அதேநேரத்தில், மருத்துவ துறையிலும் பட்டம் பெற திட்டமிட்டுள்ளார்.
சிறுவன், சிறு வயதில் இருக்கும் போதே, அவருக்குள் சிறப்பான திறமை உள்ளதை அவரது தாத்தா, பாட்டி கண்டுபிடித்து கூறினர். ஆனால், குழந்தை மீதான பாசத்தால், அவர்கள் மிகைப்படுத்துவதாக பெற்றோர்கள் கருதினர். இந்நிலையில், சிறுவனது திறமையை ஆசிரியர்கள் கண்டறிந்து கூறினர். 4 வயதில் பள்ளிப்படிப்பை ஆரம்பித்த சிறுவன், 12 மாதத்தில், 5 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டார். திறமையை கண்டறிந்த ஆசிரியர்கள், தேர்வுக்கு மேல் தேர்வு நடத்தி அவரது திறமையையும், தகுதியையும் வளர்த்தனர்.
சிறுவனின் தாயார் லிடியா கூறுகையில், கர்ப்பமாக இருந்த போது அதிகளவு மீன் உட்கொண்டதாக தெரிவித்தார்.
பல்கலை வெளியிட்ட அறிக்கையில், இளம் வயதில் பட்டம் வழங்குவது எளிதான விஷயமாக உள்ளது. திறமையான குழந்தைகளுக்காக மாற்றம் செய்ய பல காரணங்கள் உள்ளது. சிமன்ஸ் லாரன்ட்டிடம், மிகச்சிறப்பான திறமை உள்ளது. எனக்கூறியுள்ளது.
லாரன்ட் திறமையை உணர்ந்த உலகில் தரம் வாய்ந்த பல பல்கலைகள், அவரது மேற்படிப்புக்கான செலவை ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், எதிர்காலத்தில் செயற்கை உடல்உறுப்புகள் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
பெற்றோர்கள் கூறுகையில், எங்களது மகன் மற்ற குழந்தைகள் போல இருக்க வேண்டும். அவருக்கு, தனது நாயுடன் விளையாடவும், போனை பயன்படுத்துவதும் மிகவும் பிடிக்கும். திறமைக்கும், வயதிற்கும் இடையிலான சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என விரும்புகிறோம் என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U