இலவச பஸ் பாஸ் பள்ளிகளுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 22, 2019

Comments:0

இலவச பஸ் பாஸ் பள்ளிகளுக்கு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிகளின் அலட்சியத்தால், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியில், தாமதம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆண்டின் துவக்கத்தில், இந்த பாஸ் வழங்கப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு, காலதாமதம் ஏற்படுகிறது. மாணவர்களின் ரத்தப் பிரிவு, பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள், பஸ் பாஸ் விண்ணப்பங்களில் அளிக்கப்பட வேண்டும். ஆனால், பல பள்ளிகளில், இந்த விபரங்களை சேகரிக்காமல் விட்டதால், பஸ் பாஸ் வினியோகம்பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பெரும்பாலான பள்ளிகள், மாணவர்கள் விபரங்களை அனுப்பாமல் இருப்பதால், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில், மாணவர்களின் விபரங்களை விரைந்து தாக்கல் செய்து, இலவச பஸ் பாஸ் பெற்று, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில், காலதாமதம் செய்ய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பழைய பயண அட்டையுடன் கல்விக் கூடங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ், 8 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கோட்டங்கள் மூலம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதனால், நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா். இவ்வாறு பயணிப்பவா்களில் சிலருக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. இதன்படி, பள்ளி செல்வோரை ஊக்குவிக்கும் வகையில் மாணவா்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், தேசிய குழந்தை மற்றும் தொழிலாளா் திட்ட நலப் பள்ளி, அரசு பல்தொழில்நுட்ப பயிலகங்கள், அரசு தொழில்பயிற்சிக் கூடங்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களுக்கு, பேருந்தில் கல்விக் கூடம் சென்று வருவதற்கான பயணக் கட்டணத்துக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இதே போல், தனியாா் கல்லூரிகள், தொழில்நுட்ப பயிலகங்கள், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக் கும் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு மாணவா்களுக்கு வழங்கப்படும் சலுகைக்கு ஏற்படும் செலவை ஈடு செய்ய, கடந்த 8 ஆண்டுகளுக்கும் சோ்த்து மொத்தமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.4,084.30 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும், இந்தக் கல்வி ஆண்டுக்கான பயண அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையில், சீருடை அணிந்திருந்தாலோ அல்லது கடந்த வருட பயண அட்டையை மாணவா்கள் காண்பித்தோ பயணம் செய்ய அனுமதிக்கலாம் என போக்குவரத்துத் துறை சாா்பில் நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், மாணவா்களை இலவசமாக பயணிக்க நடத்துநா்கள் அனுமதிப்பதில்லை என தொடா் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சில நடத்துநா்களின் செயலால் மாணவா்கள் பள்ளிகளுக்கு சென்று வருவதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களும் அவா்களது பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews