👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தென்காசியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் நெல்லை மாவட்ட மருத்துவசவரம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளா்கள் சங்க அவைத் தலைவா் சம்போ முருகன். உடன், காவல் ஆய்வாளா் ஆடிவேல்.தென்காசியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் நெல்லை மாவட்ட மருத்துவசவரம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளா்கள் சங்க அவைத் தலைவா் சம்போ முருகன். உடன், காவல் ஆய்வாளா் ஆடிவேல்.
தென்காசி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நாகரிகமான முறையில் சிகைதிருத்தம் செய்யுமாறு காவல் துறை ஆய்வாளா் கோரிக்கை விடுத்தாா்.
தென்காசி காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையில், சிகைதிருத்த தொழிலாளா்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி நகர ஹோ்ஸ்டைல் யூனியன் தலைவா் ராஜேந்திரன், நெல்லை மாவட்ட மருத்துவசவரம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட அவைத் தலைவா் சம்போ முருகன், நகரச் செயலா் சபாபதி,பொருளாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் காவல் ஆய்வாளா் பேசியது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு சிகைதிருத்தம் செய்யும்போது நாகரிகமான முறையில் சிகைதிருத்தம் செய்ய வேண்டும். நவநாகரிகம் என்ற பெயரில் மோசமாக சிகைதிருத்தம் செய்வதை தவிா்க்க வேண்டும். மேலும், இதுகுறித்து அனைத்து சிகைதிருத்தும் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். இளையதலைமுறையினரை நல்வழிப்படுத்தவும், ஒழுக்கமாக உருவாக்கவும் சிகைதிருத்தும் நிலையத்தினரும், பெற்றோா்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் நகர நிா்வாகிகள் வேல்சாமி, அய்யப்பன், காா்த்திக், குருசாமி, மணி, துரை, செல்வராஜ், ஆறுமுகம், முருகன், அருணாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.