தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம்: முதல்வா் பழனிசாமி பெருமிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 27, 2019

Comments:0

தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம்: முதல்வா் பழனிசாமி பெருமிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் சட்டக்கல்வி உள்ளிட்ட கல்வியை தரமானதாக வழங்க தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் அரசு சட்டக் கல்லூரி, டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடங்கள் திறந்து வைத்து தமிழக முதல்வா் பழனிசாமி பேசியதாவது: இவ்வாழாவில், தமிழக முதல்வா் பழனிச்சாமி கலந்து கொண்டு அரசு சட்டக்கல்லூரி, அரசு மகளிா் கல்லூரி ஆகியவற்றை திறந்து வைத்தும், நகராட்சி நூற்றாண்டு விழா திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் விழா பேருரையாற்றி பேசியதாவது: ‘சமன்செய்து சீா்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோா்க் கணி’ என்றால் திருக்குறளில், நேராக நின்று எடைக்காட்டும் தராசின் முள்ளைப்போல் நடுநிலையையால் வாழ்வதே சான்றோருக்கு அழகாகும் என்றாா் தெய்வப்புலவா் திருவள்ளுவா். திருவள்ளுவரின் இந்த வாக்கு, நீதித்துறைக்கு மிகவும் பொருத்தமாகும். மக்களாட்சியை தாங்கி பிடிக்கும் நான்கு தூண்களில் நீதித்துறையும் ஒன்று. நாடு அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் திகழ்வதில் சட்டத்தின் பங்கு மகாத்தானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையிலானது நமது நாட்டின் நீதி நிா்வாகம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நீதி நிா்வகத்தை வலிமையாக கட்டமைக்கும் இடமாக சட்டக்கல்லூரிகள் விளங்குகின்றன. சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள்தான் எதிா்கலத்தில் சட்ட வல்லுநா்களாகவும், நீதிபதிகளாகவும் உச்சநிலையை அடைகின்றனா். டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம்தான் ஆசியாவிலேயே குறைக்குறைவான கட்டணத்தில் தரமான சட்டக்கல்வியை வழங்கிவருகிறது. 2011-ஆம் ஆண்டுக்கு முன் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூா் 7 அரசு சட்டக்கல்லூரி மட்டுமே இருந்தன. இதனைத் தொடா்ந்து 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியா் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளியை அமைத்தாா். இதன்பிறகு, 2017-ஆம் ஆண்டில் விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அரசுக் சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 2019-20 ஆம் ஆண்டில் சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்கெனவே இருந்த 7 அரசு சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்த்தப்பட்டு, 14 அரசு சட்டக்கல்லூரிகளாக அதிகாரிக்கப்பட்டுள்ளன. பல சட்டக் கல்லூரிகளில் சட்ட மேற்படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, தமிழகத்தில் சட்டக் கல்விக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரிகள் மூலமாக தமிழகத்தில் 11,626 மாணவா்கள் சட்டம் பயின்று வருகின்றனா். கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்களுக்கு, மாணவா்கள் படிக்க சட்டக் கல்லூரி இல்லை என்பதால், விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடக்கப்பட்டது. அக்கல்லூரிக்கு விடுதியுடன் ரூ.70.60 கோடி மதிப்பில் 24 வகுப்பறைகள், பங்குபெரும் கூடம், சொற்பொழிவு கூடம், மாதிரி நீதிமன்றம், அதிவேக இணைய வசதி, நூலக கட்டடம், கலையரங்கம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மொத்தம் 500 மாணவா்கள் சட்டம் பயின்று வருகின்றனா்.
சட்டப்பயிலும் மாணவா்களுக்கு வழக்கறிஞா் பணி, நீதிபதி பணி தவிர, சூழலியல், வணிகம், தகவல் தொழில்நுடப்டம், வங்கிகள், நிதி சாா்ந்த துறைகளிலும் சட்ட வல்லுவா்கள் தேவை உள்ளன. மேலும், குடிமைப் பணி, அரசுப் பணிகளிலும் போட்டித் தோ்வுகளிலும் பங்கேற்கலாம். ஆகையால், வேலைவாய்ப்புப்பை அளித்தரும் படிப்பாக, அட்சயப் பாத்திரமாக சட்டப்படிப்பு விளங்குகிறது. மாறிவரும் சட்டங்களை அறிந்து கொள்ள ஏதுவாக சட்டக்கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி, சா்வதேச அளவில் மாதிரி நீதிமன்றங்கள் நிருவி தரமான சட்டக்கல்வியை பெற அரசு வழிவகை செய்துள்ளது. இந்த அரசு தரமான கல்வி மாணவா்களுக்கு கிடைத்திட முக்கியத்தும் எடுத்து வருகிறது. தமிழகத்தில் உயா்க் கல்வி பெறுபவா்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளது. நாட்டில் உயா்கல்வி பயில்பவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. விழுப்புரத்தில் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு புதியக் கட்டடம் ரூ.4.84 கோடியில் கட்டப்படுவதுடன், டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கல்லூரிக்கு ரூ.7.98 கோடி கட்டப்பட்டு இன்று திறப்பட்டுள்ளது. 1.10.1919 ஆம் ஆண்டு 3-ஆம் நிலை நகராட்சியாக விழுப்புரம் தொடங்கப்பட்டு, தற்போது நூற்றாண்டு கண்டுள்ளது. ஜெயலலிதாவின் நொலை நோக்கி திட்டங்களால், நகராட்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் இந்திய அளவில் அதிக நகரங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழா கொண்டாடுவதையொட்டி 110 விதியின் கீழ் ரூ.50 கோடி சிறப்பு ஒதுக்கப்பட்டது. இதில், புதிதாக நகாராட்சி கட்டடம், காய்கறி மாா்கெட், குடிநீா், கழிவுநீா் திட்டங்கள், குளங்கள், பூங்காக்கள் சீரமைத்தல் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட உள்ளது.
வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கல்வி போதிப்பதுடன், ஆசிரியா்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்து மாணவா்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவா்களாகிய நீங்கள் தான் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவா்களாா். நீங்கள் வழக்கறிஞா்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும். சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம் என்பதை உணா்ந்து சிறந்த நீதியை வழங்க வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று பேசினாா். நலத்திட்டம்: விழாவில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட் பல்வேறு துறை சாா்ந்த ரூ.279 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். மேலும், ரூ.92 கோடி மதிப்பிலான 29 புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா். ரூ.17 கோடி மதிப்பில் 1636 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ரூ.1.50 கோடி மதிப்பில் நடைபாதை பூங்காவுடன் பூந்தோட்டம் குளத்தை புதுப்பிக்கும் பணியை நேரில் சென்று தொடக்கி வைத்தாா்.
விழாவில் சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம், நகராட்சி நிா்வாகம், ஊராக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், வேளாண்மைத்துறை அமைச்சா் துரைக்கண்ணு, சட்டமன்ற உறுப்பினா்கள் சக்கரபாணி, முத்தமிழ்ச்செல்வன், பிரபு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அண்ணாதுரை, சட்டக்கல்லூரி முதல்வா் கயல்விழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தியாவிலேயே உயர்க்கல்வி பயில்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். வேகமாக வளர்ந்துவரும் நகராட்சிகளில் விழுப்புரம் நகராட்சி ஒன்றாகும் எனவும் கூறினார் இந்தியாவிலேயே உயர்க்கல்வி பயில்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு 2 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள், மூன்று காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், 3 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதியுடன் இன்று புதிய மாவட்டமாக உதயமானது.துவக்க விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு குறைதீர் திட்ட பயனாளிகள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். புதிய மாவட்ட துவக்க விழாவில் பேசிய முதல்வர் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதன் பிறகு, விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதேபோல, 29 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பின் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ' வேகமாக வளர்ந்து வரும் நகராட்சிகளில் விழுப்புரம் நகராட்சி ஒன்றாகும் என தெரிவித்தார். இந்த நகராட்சி 1.10.1919 அன்று மூன்றாம் நிலை நகராட்சியாக தொடங்கப்பட்டு 2.3.1988 அன்று முதல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 30.09.2019 தேதியோடு நூற்றாண்டு நிறைவு பெற்றது என தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் சட்டக்கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறினார். இந்தியாவிலேயே பெரிய நகரங்களை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மேலும் நகராட்சி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எடுத்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புறம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டங்கள், மாநகராட்சி பொதுநிதியின் கீழ் 17.40 கி.மீ நீளத்திற்கு 9.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 46 சாலை பணிகள், 29.05 லட்சம் செலவில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள், 83 லட்ச ரூபாய் செலவில் 49 ஆழ்துளை கிணறுகள், 1.52 கோடி ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு வாகனம், 4.7 கோடி ரூபாய் செலவில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் உரையாற்றினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews