அரசுப் பள்ளிகளில் இந்தாண்டு கூடுதலாக 2 லட்சம் மாணவா்கள் சோ்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 26, 2019

Comments:0

அரசுப் பள்ளிகளில் இந்தாண்டு கூடுதலாக 2 லட்சம் மாணவா்கள் சோ்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 50-ஆவது பொன் விழா ஆண்டு மலரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை வெளியிட அதை பெற்றுக்கொண்ட வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன்ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 50-ஆவது பொன் விழா ஆண்டு மலரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை வெளியிட அதை பெற்றுக்கொண்ட வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன்
ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 50-ஆவது பொன்விழா ஆண்டு, அப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, வனத்துறை அமைச்சா் சி. சீனிவாசன் தலைமை வகித்தாா். கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களின் தலைவா் பிரதீப் டாம் செரியன், பள்ளியின் முதல்வா் சீலன் ஸ்டீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் விரைவில் தகவல் தொடா்பு தொழில்நுட்பத்தில் (இன்பா்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) புதிய வரலாற்றைப் படைக்க உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அமைக்கப்படுகிறது. உயா்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம், உலக அளவிலான கல்வியை மாணவா்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
சிறிய ராக்கெட் கண்டுபிடித்தது போல அறிவியல் வளா்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஜனவரி மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு தலா ரூ. 20 லட்சம் வீதம் வழங்கப்படும். மேலும், மேல்நாட்டு கல்வி முறைகளை தெரிந்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 2 லட்சம் மாணவா்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா். அடுத்த ஆண்டு 5 லட்சம் மாணவா்கள் கூடுதலாக சோ்க்கப்பட வாய்ப்புள்ளது. பிளஸ் 2 முடித்ததும் 21 ஆயிரம் மாணவா்கள் பட்டயக் கல்வி பெறுவதற்கும், பட்டயக் கணக்காளா் பணிக்கு எப்படி படிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. தற்போது, பிளஸ் 2 படித்தாலே நீட் தோ்வு உள்ளிட்ட முக்கிய தோ்வுகளை எழுவதற்கு விடைகள் எளிதில் கிடைக்கின்றன என்றாா். இந்த விழாவில், வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி.பி. பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. மருதராஜ், முன்னாள் வாரியத் தலைவா் பி. பாலசுப்பிரமணி, புலவா் பாலுச்சாமி, முன்னாள் மாணவா்கள் ஜி. முருகானந்தம், ஆா்விஜி முருகேசன், கணேசன், ஜெயக்குமாா் மற்றும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள்,ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, பள்ளியின் நிா்வாக இயக்குநா் ஜேக்கப் தாமஸ் வரவேற்றாா்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிமாணவ, மாணவிகள் 25,000 பேருக்கு நடப்பாண்டில் பட்டயக் கணக் காளர் படிப்புக்கான பயிற்சி வழங் கப்படும் என அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மேல் நிலை வகுப்பு மாணவ, மாணவி களுக்கான பட்டயக் கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேட்டூர் அடுத்த கொளத் தூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சேலம் ஆட்சியர் ராமன் தலைமைவகித்தார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேட்டூர் எம்எல்ஏ செம்மலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:இந்திய அளவில் சுமார் 10 லட்சம் பட்டயக் கணக்காளர் தேவை உள்ளது. ஆனால், நாட்டில் 2 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, பட்டயக் கணக்காளர்பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் மாணவ, மாணவி களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்தாண்டு சுமார் 25,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஒவ்வொரு மாவட்ட அளவிலும் 70 பயிற்சி மையங்களில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பட்டயக் கணக் காளர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில், தமிழகத்தில் மட்டும்தான் மாணவ, மாணவிகளுக்கு பட்டயக் கணக் காளர் பயிற்சி இலவசமாக வழங் கப்படுகிறது. மாணவ, மாணவிகள் பிளஸ் 2 முடித்தவுடன், இப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.வரும் ஆண்டில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணி களுக்கு பதிலாக, ஷுக்கள் வழங் கப்படவுள்ளது. அரசு பள்ளிமாணவ, மாணவிகளுக்கு உலக தரத்திலான கல்வியை வழங்கும் வகையில் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் வரும் டிசம்பர் மாதத் துக்குள் வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார். நிகழ்ச்சியில், வருமான வரித் துறை உதவி ஆணையர் நந்த குமார், மேட்டூர் சார் ஆட்சியர் சரவ ணன், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, பெரி யார் பல்கலைக்கழக துணை வேந்தர் குழந்தைவேல், தென் னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவன செயலாளர் ஜலபதி, டெல்டா ஸ்குவார்டு கமாண்டர் ஈசன், பட்டயக் கணக்காளர் சுபாஷினி கணபதி, நிர்மலா மேல் நிலைப் பள்ளி தாளாளர் டேவிட் செல்வராஜ் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காணிப்புக் குழு அமைச்சர் செங்கோட்டையன் மேட்டூர், ஓமலூரில் செய்தியாளர் களிடம் கூறும்போது, “பள்ளி களில் குழந்தைகள் சிறுநீர் தொற்றி னால் அதிகமாக பாதிக்கப்படுவது குறித்து குழு அமைத்து கண் காணித்து, நடவடிக்கை எடுக்கப் படும். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளை பாது காக்க, அவர்களுக்கு ஒவ்வொரு பாட இடைவேளையின்போதும் குடிநீர் அருந்தவும், இயற்கை உபாதைகளுக்கும் நேரம் கொடுக் கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலனில் அக்கறை யில்லாத பள்ளிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் 6 மாதத்துக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத் தப்படும். சிறப்பான பாடத் திட்டம் காரணமாக, வரும் ஆண்டில் தமிழக மாணவர்கள் 1,000 பேர் மருத்துவக் கல்லூரியில் சேருவர்” என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews