👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பான பல்கலைக்கழக அறிவிப்பு:
பல்கலைக்கழகம் வழங்கும் பி.எட். சிறப்புக் கல்வியில் சேர வருகிற 18-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் இந்திய மறுவாழ்வு கழக அங்கீகாரத்துடன் இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பு பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது.
இதில் சேர விரும்புபவா்கள் பிளஸ்-2 முடித்து, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு
044 - 24306600, 24306617 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பதிவாளர் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், 2020ம் ஆண்டுக்கான, பி.எட்., சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள், வரும், 18ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரத்துடன், இந்த படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பு, பி.எட்., பொதுப்படிப்புக்கு இணையானது.பி.எட்., சிறப்பு கல்வி படிப்புக்கு, பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளில், ஏதாவது, ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்ப விபரங்களை,
www.tnou.ac.in என்ற இணையதளத்திலும், 044 - 2430 6600 என்ற தொலைபேசி எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.