Search This Blog
Wednesday, November 06, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளுக்கு மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பதவியில் (2017-2019ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 49 பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்வை கடந்த ஜூன் 23ம் தேதி நடத்தியது. இதில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக 102 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் 2018-2019ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொதுப்பணிகளுக்கு சென்னை, சமுக நீதி மற்றும் மனித உரிமை, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கான சமூகவியலாளர் மற்றும் பொருளாதார வல்லுநர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்வில் 6 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வாளர் பதவிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார துறையில், மருத்துவ பணி மற்றும் சார்நிலை பணிகளில், ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பதவியில், 49 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், போட்டி தேர்வு, ஜூன், 23ல் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, 'ஆன்லைனில்' சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் வரும், 11 முதல், 15க்குள், தமிழக அரசின், இ - சேவை மையங்கள் வாயிலாக, ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில், பொருளாதார வல்லுனர் மற்றும் சமூகவியலாளர் பதவியில், இரு பணியிடங்களுக்கு, ஆகஸ்ட், 24ல் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவலை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பதவி ரிசல்ட் TNPSC தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.