அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு டீன்கள் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 07, 2019

Comments:0

அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு டீன்கள் நியமனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள, ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளில், விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் ஆகிய, ஐந்து புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு, டீன்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். நாமக்கல் மருத்துவ கல்லுாரிக்கு மட்டும், டீன் நியமிக்கப்படவில்லை.மேலும், நான்கு டீன்கள் மாற்றப் பட்டுள்ளனர்; 13 பேராசிரியர்கள், டீன்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 4 மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம் செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: சேலம், மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால்பாபு, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கும், அரசு கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், சேலம் மருத்துவக் கல்லூரிக்கும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஜயகுமார், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கும், மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews