அரிசி கார்டு மாற்ற இன்று கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 29, 2019

அரிசி கார்டு மாற்ற இன்று கடைசி நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
Statement of the Honble Minister for Food and Civil Supplies on extension of last date for conversion of sugar option family cards to rice cards சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்ற கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இதுவரை சர்க்கரை மட்டுமே வாங்கி வந்த குடும்ப அட்டை தாரர்கள் இனி தங்கள் கார்டை அரிசி பெறக்கூடிய கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 10 லட்சத்து 19,491 ரேஷன் அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன.
இந்த ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டைகளை அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, 26.11.2019 வரை https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசமானது இன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 29ம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், இதுவரை ஒரு லட்சத்திற்கு 25,000 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews