Breaking

Saturday, November 23, 2019

ஒரு வாரத்துக்குள் தோ்தல் கல்வியறிவுக் குழுக்கள் அமைக்க வேண்டும்: தலைமைத் தோ்தல் அலுவலா் சத்யபிரதா சாகு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
''தமிழ்நாட்டில், 13 ஆயிரம் தேர்தல் கல்வியறிவு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன,'' என, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு பேசினார்.தேர்தல் கல்வியறிவு குழுக்களில் இடம்பெறும் அதிகாரிகளுக்கு, பயிற்சி முகாம், வேலுாரில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், சத்யபிரதா சாகு துவக்கி வைத்து பேசியதாவது:மாணவர்களிடையே வாக்காளர் பட்டியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாட்டில், 13 ஆயிரம் தேர்தல் கல்வியறிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கும் போதே, தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தல் முக்கியத்துவம், நடத்தும் முறைகள் குறித்து, தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். 18 வயது பூர்த்தியானவுடன், வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். ஓட்டுக்கு பணம் பெறுவதை தடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது எம்.பி., தேர்தல்களில், 73 சதவீதம் வரை ஓட்டு பதிவாகி உள்ளன. இதை இன்னும் அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog